அரும்பரும்பா சரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. சுசீலாஇளையராஜாசின்னத்தாயி

Arumbarumba Saram Song Lyrics in Tamil


BGM

பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த…
அழகு மலர் மாலை இது ஆராரோ…
தரையினிலே தவழ்ந்து வந்த…
தங்க நிலா மேனியிது ஆராரோ…

பெண் : மகளே நீ மயங்காதே…
மணி விழியே கலங்காதே…
பூச்சூடும் மணி பூந்தேரே…
கூத்தாடும் பசும் பாலாறே…

பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த…
அழகு மலர் மாலை இது ஆராரோ…
தரையினிலே தவழ்ந்து வந்த…
தங்க நிலா மேனியிது ஆராரோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஒருவன் இசையினிலே விரித்த வலையினிலே…
இரையாக நான் விழுந்தேனே…
மனிதன் குணங்களையும் மாறும் நிறங்களையும்…
அறியாமல் நான் இருந்தேனே…

பெண் : நஞ்சை விட கொடிது ஆடவனின் மனது…
அன்னை இதை அறிந்தால் அல்லல் பட்ட பிறகு…

பெண் : ஏமாந்தால் தாயும் என்னை போல நீயும்…
ஆசை வைக்காதே பின்பு அவதிபடாதே…

பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த…
அழகு மலர் மாலை இது ஆராரோ…
தரையினிலே தவழ்ந்து வந்த…
தங்க நிலா மேனியிது ஆராரோ…

BGM

பெண் : புதிய தலைமுறையே வளரும் இளம் பிறையே…
தேயாமல் வாழ்ந்திடு நீயே…
இளமை தலைவிரிக்க எனையே விலை கொடுத்து…
மடி மீது வாங்கிய சேயே…

பெண் : உன்னை விட எனக்கு சொத்து சுகம் எதற்கு…
இந்த உயிர் உடலில் உன்னை நம்பி இருக்கு…

பெண் : நாம் காண கூடும் இள வேனில் காலம்…
மார்பினில் ஆடும் சிறு மாதுளம் பூவே…

பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த…
அழகு மலர் மாலை இது ஆராரோ…

பெண் : மகளே நீ மயங்காதே…
மணி விழியே கலங்காதே…
பூச்சூடும் மணி பூந்தேரே…
கூத்தாடும் பசும் பாலாறே…

பெண் : அரும்பரும்பா சரம் தொடுத்த…
அழகு மலர் மாலை இது ஆராரோ…


Notes : Arumbarumba Saram Song Lyrics in Tamil. This Song from Chinna Thayee (1992). Song Lyrics penned by Vaali. அரும்பரும்பா சரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading