அம்மா நீ சுமந்த பிள்ளை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்இளையராஜாஅன்னை ஓர் ஆலயம்

Amma Nee Summandha Pillai Song Lyrics in Tamil


ஆண் : அம்மா…

BGM

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்…
அன்னை ஒர் ஆலயம்…

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…

BGM

ஆண் : மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாத போது…
மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது…
மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாத போது…
மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது…

ஆண் : அன்னை சொன்ன வார்த்தை இன்று நினைவில் வந்தது…
அன்பு என்ற சொல்லே தாயின் வடிவில் வந்தது….
எங்கே… எங்கே…

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…

BGM

ஆண் : வாழவைத்த தெய்வம் இன்று வானம் சென்றதேனோ…
உலகிலே உன் மகன் நீர் இல்லாத மீனோ…
வாழவைத்த தெய்வம் இன்று வானம் சென்றதேனோ…
உலகிலே உன் மகன் நீர் இல்லாத மீனோ…

ஆண் : மீண்டும் இந்த மண்ணில் வந்து…
தோன்ற வேண்டுமே…
வாழ்க வாழ்க மகனே என்று…
வாழ்த்த வேண்டுமே…
எங்கே… எங்கே…

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்…
அன்னை ஒர் ஆலயம்…


Notes : Amma Nee Summandha Pillai Song Lyrics in Tamil. This Song from Annai Oru Aalayam (1979). Song Lyrics penned by Vaali. அம்மா நீ சுமந்த பிள்ளை பாடல் வரிகள்.


Scroll to Top