அழகிய லைலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோசிற்பிஉள்ளத்தை அள்ளித்தா

Alagiya Laila Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகிய லைலா…
அவள் இவளது ஸ்டைலா…
சந்தன வெயிலா…
இவள் மன்மத புயலா…

ஆண் : அடடா பூவின் மாநாடா… ஓஓ ஓஓ…
அழகுக்கு இவள்தான் தாய் நாடா…

ஆண் : அழகிய லைலா…
அவள் இவளது ஸ்டைலா…
சந்தன வெயிலா…
இவள் மன்மத புயலா…

ஆண் : அடடா பூவின் மாநாடா… ஓஓ ஓஓ…
அழகுக்கு இவள்தான் தாய் நாடா…

BGM

ஆண் : ஏ… சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே…
சூரிய நிலவாய் ஆனது அங்கே…
என் மனம் இன்று போனது எங்கே…
மன்மதனே உன் ரதி எங்கே…

ஆண் : கன்னத்தை தொட்டால் சந்தனம் கொட்டும்…
வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும்…
புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும்…
பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்…

ஆண் : காலடி ஓசைகள் கம்பனை கேட்டது…
அம்மம்மா…

ஆண் : பிக்காசோவின் ஓவியம் ஒன்று…
பீத்தோவனின் சிம்பனி ஒன்று…
பெண்ணாய் மாறியதோ…

ஆண் : அந்தப்புரத்து மகராணி… ஓஓ ஓஓ…
அந்தப்புரத்து மகராணி…

ஆண் : அழகிய லைலா…
அவள் இவளது ஸ்டைலா…
சந்தன வெயிலா…
இவள் மன்மத புயலா…

ஆண் : அடடா பூவின் மாநாடா… ஓஓ ஓஓ…
அழகுக்கு இவள்தான் தாய் நாடா…

BGM

ஆண் : உயிருக்குள் மின்னல்கள் அடித்ததென்ன…
தாகங்கள் என்னை குடித்ததென்ன…
அழகில் என்னை வளைத்ததென்ன…
இதயம் கொள்ளை போனதென்ன…

ஆண் : ரகசியமாய் இவள் இளமையை ரசித்தேன்…
கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன்…
கனவுகள் அடுக்கி காலையில் கலைத்தேன்…
தினம் தினம் இவளை யோசித்தேன்…

ஆண் : வாலிப குறும்புகள் ஜாடைகள் சொல்லுது…
அய்யய்யோ…

ஆண் : பூக்கள் அவளை பார்த்து பார்த்து…
ஆட்டோகிராப்பை கேட்டு கேட்டு…
கைகள் நீட்டியதோ…

ஆண் : அந்தப்புரத்து மகராணி… ஓஓ ஓஓ…
அந்தப்புரத்து மகராணி…

ஆண் : அழகிய லைலா…
அவள் இவளது ஸ்டைலா…
சந்தன வெயிலா…
இவள் மன்மத புயலா…

ஆண் : அடடா பூவின் மாநாடா… ஓஓ ஓஓ…
அழகுக்கு இவள்தான் தாய் நாடா…


Notes : Alagiya Laila Song Lyrics in Tamil. This Song from Ullathai Allitha (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. அழகிய லைலா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top