அடியே கிறுக்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மானே வில்லன்ஸ்விகானெஸ் ஜெய்ஷேன் எக்ஸ்ட்ரீம்ஆல்பம் சாங்ஸ்

Adiyeh Kirukki Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடியே கிறுக்கி எதுக்கு சிரிச்சி போன…
இரும்பு மனச முழுசா உருக்கி போன…

ஆண் : தினமும் உன் கூட விடிஞ்சா நான் பேச…
எழுந்து பாக்குறப்போ பக்கத்துல நீ இல்ல…
உடஞ்ச கல் போல கிடந்தேன் வழி மேல…
உன்ன நான் பாக்கும் அந்த நொடிய நெனச்சு கிடந்து தவிச்சேன்…

ஆண் : அடியே கிறுக்கி எதுக்கு சிரிச்சி போன…
இரும்பு மனச முழுசா உருக்கி போன…

—BGM—

ஆண் : அலஞ்சு திருஞ்சு நானும் வழிய மறந்து போன…
வருஷமெல்லாம் வீணே வயசு கூடுதே…
அழுகை வந்த போதும் உள்ள அழுது நொந்தேன்…
நண்பன்கிட்டதானே கொட்டி தீக்குறேன்…

ஆண் : ரோட்டுல வீதியில் உன்ன பாக்குறேன்…
ஏதேதோ தோணுதே ஏமாந்து போகுறேன்…
உண்மையில் உன் ஏக்கங்கள் நெஞ்சுல…

ஆண் : அடி மனசுல அணை கட்டி வச்சேன்…
அணை உடைஞ்சு பாயுது…
அலை அடிக்குது கரை ஒதுங்குது…
நுரை மட்டும் விட்டு போகுது…

ஆண் : ஒத்த மனசுல நீ இருக்குற…
மொத்தமும் உனக்கு தோணல…
பட்டினி கிடந்து பத்தியம் இருக்கேன்…
மறுபடி என்ன சேரடி கிளியே…

—BGM—

ஆண் : வாழ்க்கை வெறுத்து போச்சு அனாதையாக ஆனேன்…
தன்னாலே நீயும் வந்த மெய்யாக தோணுமே…
வானம் இடிஞ்சு போச்சு நிலாவும் ஈரமாச்சு…
நீ இல்லாத வாழ்க்கை பொய்யாக மாறுதே…

ஆண் : கெஞ்சி நான் கேக்குறேன் கொஞ்சம் இரங்கடி…
நீயாக பேசுன நீயாக வந்தவ…
இப்ப ஏன் என்ன கண்டாலே நடிக்கிற…

ஆண் : ஒன்னு வாழ விடு இல்லை சாக விடு…
ரெண்டும் கெட்டு நானும் வாழுறேன்…
என்ன மன்னிச்சிடு இல்லை புதச்சிடு…
எதுக்கு இப்படி படுத்துற…

ஆண் : கண்ண பாக்க வேணும் கைய புடிக்கணும்…
இதுக்கு தானே ஏங்குறேன்…
மறுபடி நீயும் வந்து சேர…
இந்த உசுர பிடிச்சு வைக்கிறேன் அடியே…

ஆண் : அடியே கிறுக்கி எதுக்கு சிரிச்சி போன…
இரும்பு மனச முழுசா உருக்கி போன…

ஆண் : தினமும் உன் கூட விடிஞ்சா நான் பேச…
எழுந்து பாக்குறப்போ பக்கத்துல நீ இல்ல…
உடஞ்ச கல் போல கிடந்தேன் வழி மேல…
உன்ன நான் பாக்கும் அந்த நொடிய நெனச்சு கிடந்து தவிச்சேன்…

ஆண் : அடியே கிறுக்கி எதுக்கு சிரிச்சி போன…
இரும்பு மனச முழுசா உருக்கி போன…

—BGM—


Notes : Adiyeh Kirukki Song Lyrics in Tamil. This Song from Album Song (2014). Song Lyrics penned by Maney Villanz. அடியே கிறுக்கி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading