அடையாளம் ஏராளம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துஅந்தோனி தாசன் & வாகு மாசான் வாகு மாசான் நாட்படு தேறல்

Adaiyalam Yeralam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடையாளம் ஏராளம்…
ஆளெங்க… பேரெங்க…
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்…
நீயெங்க… நானெங்க…

ஆண் : கும்பி எரியுதடி…
கொந்தளிக்கும் எம்மனசில்…
தும்பி பறக்குதடி…
தோணுதடி பழைய கதை…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அடையாளம் ஏராளம்…
ஆளெங்க… பேரெங்க…
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்…
நீயெங்க… நானெங்க…

பெண் : கும்பி எரியுதய்யா…
கொந்தளிக்கும் எம்மனசில்…
தும்பி பறக்குதய்யா…
தோணுதய்யா பழைய கதை…

—BGM—

ஆண் : ஓஓ… மின்னல் வெட்டும் ராத்திரியில்…
சன்னல் பக்கம் நீஅழைக்க…
அந்நேரம் பாத்து…
அஞ்சாறு நாய் கொலைக்க…

ஆண் : வெறிச்சோடிப் போயிருந்த…
வீதியில நான்விழுந்து…
தெறிச்சோடிப் போனதுக்கு…
தெருவிளக்கு அடையாளம்…

பெண் : ஓஓ… சொட்டாங்கல்லு ஒண்ணு…
எந் தொடைப்பக்கம் தவறிவிழ…
கல்லெடுக்கும் சாக்குல…
நீ கள்ளத்தனம் பண்ண…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆடி விழுந்ததுக்கும்…
ஆளவிடு சாமியின்னு…
ஓடி ஒளிஞ்சதுக்கும்…
ஓடைக்கரை அடையாளம்…

ஆண் : அடையாளம் ஏராளம்…
ஆளெங்க… பேரெங்க…
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்…
நீயெங்க… நானெங்க…

ஆண் : கும்பி எரியுதடி…
கொந்தளிக்கும் எம்மனசில்…
தும்பி பறக்குதடி…
தோணுதடி பழைய கதை…

—BGM—

பெண் : ஓஓ… சீலகட்டத் தெரியாத…
சிறுமியின்னு பாக்காம…
வேளகெட்ட வேளையில…
வெறிகொண்டு நீயணைக்க…

பெண் : மாமான்னு மிரண்டதுக்கும்…
மணமாலை கேட்டதுக்கு…
ஆமான்னு சொன்னதுக்கும்…
அம்மன்கோயில் அடையாளம்…

ஆண் : ஓஓ… ஊருக்கே தெரியாம…
யாருக்கோ பெண்டாகி…
குதிரைவண்டி ஏறி…
கொடிக்கால் கடக்கையில…

ஆண் : மடிவிழுந்த கண்ணீரு…
மழையாகிப் போனதுக்கு…
இடிவிழுந்த ஆலமரம்…
இன்னைக்கும் அடையாளம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

பெண் : அடையாளம் ஏராளம்…
ஆளெங்க… பேரெங்க…
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்…
நீயெங்க… நானெங்க…

ஆண் : கும்பி எரியுதடி…
கொந்தளிக்கும் எம்மனசில்…
தும்பி பறக்குதடி…
தோணுதடி பழைய கதை…

—BGM—


Notes : Adaiyalam Yeralam Song Lyrics in Tamil. This Song from Album (2021). Song Lyrics penned by Vairamuthu. அடையாளம் ஏராளம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading