அச்சம் என்பது மடமையடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்டி.எம். சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திமன்னாதி மன்னன்

Acham Enbathu Madamaiyada Song Lyrics in Tamil


ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…

—BGM—

ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…

ஆண் : ஆறிலும் சாவு நூறிலும் சாவு…
தாயகம் காப்பது கடமையடா…
தாயகம் காப்பது கடமையடா…

ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…

—BGM—

ஆண் : கனகவிஜயரின் முடித்தலை நெறித்து…
கல்லினை வைத்தான் சேர மகன்… ஆஆ… ஆஆ…
கனகவிஜயரின் முடித்தலை நெறித்து…
கல்லினை வைத்தான் சேர மகன்…

ஆண் : இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி…
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே…

ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…

—BGM—

ஆண் : கருவினில் வளரும் மழலையின் உடலில்…
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை… ஆஆஆ…
கருவினில் வளரும் மழலையின் உடலில்…
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை…

ஆண் : களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்…
காத்திட எழுவான் அவள் பிள்ளை…

ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…

—BGM—

ஆண் : வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி…
மக்களின் மனதில் நிற்பவர் யார்…
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி…
மக்களின் மனதில் நிற்பவர் யார்…

ஆண் : மாபெரும் வீரர் மானம் காப்போர்…
சரித்திரம் தனிலே நிற்கின்றார்…

ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…

ஆண் : ஆறிலும் சாவு நூறிலும் சாவு…
தாயகம் காப்பது கடமையடா…
தாயகம் காப்பது கடமையடா…

ஆண் : அச்சம் என்பதுமடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…


Notes : Acham Enbathu Madamaiyada Song Lyrics in Tamil. This Song from Mannadhi Mannan (1960). Song Lyrics penned by Kannadasan. அச்சம் என்பது மடமையடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading