ஆயிரம் கோடி சூரியன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஹரிஹரன்இளையராஜாகரிசக்காட்டு பூவே

Aayiram Kodi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே…
மலர்ந்த காதல் பூவே…

—BGM—

ஆண் : ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்…
கரிசகாட்டு பூவே…

—BGM—

ஆண் : வானவில்லை போலே… ஏ…
வானவில்லை போலே நீ பார்க்கும் இடமெல்லாம்…
வரும் பூவே பூவே பூவே வா…

ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே…
மலர்ந்த காதல் பூவே…

—BGM—

ஆண் : நானாக நான் இல்லையே…
நீயாக நான் ஆகிறேன்…

—BGM—

ஆண் : நீராக நீரூற்றினால் வேறாக நானாகிறேன்…

—BGM—

ஆண் : கொடியாக நான் ஆகிறேன்…
கிளையாய் நீ ஊன்று…
செடியாக நானகிறேன்…
நிலமாய் நீ தாங்கு…

ஆண் : வானத்து நிலவே வாசலில் இறங்கு…
வாசனை மலர்கள் உனக்கென விரித்தேன்…
கரிசகாட்டு பூவே…

ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே…
மலர்ந்த காதல் பூவே…
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்…
கரிசகாட்டு பூவே…

—BGM—

ஆண் : உன்னை நான் கேட்காமலே…
உன்னோடு நான் வாழ்கிறேன்…

—BGM—

ஆண் : என்னை நீ சேராமலே…
என்னோடு நீ வாழ்கிறாய்…

—BGM—

ஆண் : என் மூச்சில் எப்போதுமே…
உன் காற்றை வாங்கினேன்…
உன் காட்சி எப்போதுமே…
என் கண்ணால் பார்க்கிறேன்…

ஆண் : எனக்குள் நீயும் உனக்குள் நானும்…
இருப்பதுனாலே இனி என்ன வேண்டும்…
கரிசகாட்டு பூவே…

ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே…
மலர்ந்த காதல் பூவே…
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்…
கரிசகாட்டு பூவே…

ஆண் : வானவில்லை போலே… ஏ…
வானவில்லை போலே நீ பார்க்கும் இடமெல்லாம்…
வரும் பூவே பூவே பூவே வா…

ஆண் : ஆயிரம் கோடி சூரியன் போலே…
மலர்ந்த காதல் பூவே…
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்…
கரிசகாட்டு பூவே…


Notes : Aayiram Kodi Song Lyrics in Tamil. This Song from Karisakattu Poove (2000). Song Lyrics penned by Kasthuri Raja. ஆயிரம் கோடி சூரியன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading