ஆத்தா உன் சேலை

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே. ஏகாதேசிசுந்தர் நாராயண ராவ்ஜிப்ரான்குட்டிப் புலி

Aatha Un Selai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆத்தா உன் சேலைஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…

ஆண் : தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட…

ஆண் : தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட…

ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்…
நான் செத்தாலும் என்ன போத்த வேணும்…
பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்…
செத்தாலும் என்ன போத்த வேணும்…

ஆண் : ஆத்தா உன் சேலைஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…

—BGM—

ஆண் : தொட்டிக்குள்ள நடிச்சா…
அது அழகு முத்து மாலை…
காயம் பட்ட வெரலுக்கு…
கட்டு போடும் உன் சேலை…

ஆண் : நீ கட்டியிருக்கும் சேலை…
அது கண்ணீரில் மணக்கும்…
உன் சேலை கட்டி எறச்சா…
தண்ணி சக்கரையா இனிக்கும்…

ஆண் : என் உசுருகுள்ள சேலை…
அது மயில் இறகா விரியும்…
உன் வெளுத்த சேலை திரி போட்டா…
வெளக்கு நல்லா எரியும்…

ஆண் : உன் சேலைதானே பூஞ்சோலைதானே…
ஆத்தா ஆத்தா ஆத்தா… ஆ…

ஆண் : ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…

—BGM—

ஆண் : அக்கா கட்டி பழக…
நான் ஆடு கட்டி மேய்க்க…
ஓட்டை குடிசை வெயிலுக்கு…
ஒட்டு போட்டு மறைக்க…

ஆண் : என் கண்ணில் ஒரு தூசு பட்டா…
ஒத்தடமும் கொடுக்கும்…
அட கஞ்சி கொண்டு போனா…
சேலை சும்மாடாக இருக்கும்…

ஆண் : நான் தூங்கும்போது கூட…
அது தலையணையா பேசும்…
அட வெக்கை வரும் நேரம்…
ஒரு விசிறி போல வீசும்…

ஆண் : உன் சேலைதானே பூஞ்சோலைதானே…
ஆத்தா ஆத்தா ஆத்தா… ஆ…

ஆண் : ஆத்தா உன் சேலை ஆகாயம் போல
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல

ஆண் : தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட…

ஆண் : தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட

ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்…
நான் செத்தாலும் என்ன போத்த வேணும்…
செத்தாலும் என்ன போத்த வேணும்…

—BGM—


Notes : Aatha Un Selai Song Lyrics in Tamil. This Song from Kutti Puli (2013). Song Lyrics penned by K.Ekadesi. ஆத்தா உன் சேலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading