உலகினில் மிக உயரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைவிஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனிநான்

Ulaginil Miga Uyaram Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உலகினில் மிக உயரம்…
மனிதனின் சிறு இதயம்…
நினைவுகள் பல சுமக்கும்…
நிஜத்தினில் எது நடக்கும்…

ஆண் : விரல் நீட்டும் திசையில் ஓடாது நதிகள்…
நதி போகும் திசையில் நீ ஓடு…
உன்னை வாட்டி எடுக்கும் துன்பம் நூறு இருக்கும்…
தடை நூறு கடந்து போராடு…

ஆண் : உலகினில் மிக உயரம்…
மனிதனின் சிறு இதயம்…

—BGM—

ஆண் : கடலினில் கலந்திடும் துளியே கவலை எதுக்கு…
அலையுடன் கலந்து நீ ஆடு வாழ்க்கை உனக்கு…
உறவுகள் இனி உனக்கெதுக்கு உலகம் இருக்கு…
வலிகளை தாங்கிடும் கல்லில் சிலைகள் இருக்கு…

ஆண் : அலைகள் அலைக்களிக்கும் ஓடம்தான்…
கடலை தாண்டி வந்து கரையேறும்…
ஊசி துளைக்கும் துணி மட்டும்தான்…
உடுத்தும் ஆடை என்று உருவாகும்…
இருளில் இருந்தே வெளிச்சம் பிறக்கும் எப்போதும்…

ஆண் : உலகினில் மிக உயரம்…
மனிதனின் சிறு இதயம்…
நினைவுகள் பல சுமக்கும்…
நிஜத்தினில் எது நடக்கும்…

—BGM—

ஆண் : கனவுகள் சுமந்திடும் மனமே உறக்கம் எதுக்கு…
இருக்குது உனக்கொரு பாதை நடக்க தொடங்கு…
தயக்கங்கள் இனி உனக்கெதுக்கு துணிந்த பிறகு…
நடப்பது நடக்கட்டும் வாழ்வில் கடக்க பழகு…

ஆண் : இடிகள் இடிக்கும் அந்த வானம் தான்…
உடைந்து விழுவதில்லை எப்போதும்…
அடியை தாங்கி கொல்லும் நெஞ்சம் தான்…
அடுத்த அடியை வைத்து முன்னேறும்…
நினைப்பின் படியே எதுவும் நடக்கும் எப்போதும்…

ஆண் : உலகினில் மிக உயரம்…
மனிதனின் சிறு இதயம்…
நினைவுகள் பல சுமக்கும்…
நிஜத்தினில் எது நடக்கும்…

ஆண் : விரல் நீட்டும் திசையில் ஓடாது நதிகள்…
நதி போகும் திசையில் நீ ஓடு…
உன்னை வாட்டி எடுக்கும் துன்பம் நூறு இருக்கும்…
தடை நூறு கடந்து போராடு…


Notes : Ulaginil Miga Uyaram Song Lyrics in Tamil. This Song from Naan (2012). Song Lyrics penned by Annamalai. உலகினில் மிக உயரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading