ஆனந்த தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாமண்வாசனை 

Aanantha Thenn Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…

—BGM—

ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா…
காதல் வேகம் அந்தசோகம் கண்டுகொள்ள…
கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா…

பெண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தவரே…
காதல் வேகம் அந்த சோகம் கண்டு கொள்ள…
மஞ்சள் போட்டு தந்தால் என்னையா…

ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…

—BGM—

ஆண் : நீ நடந்து போகையிலே…
பூ நடந்து போகக்கண்டேன்…
நீ சிரிக்கும் பொன்னழகில்…
பால் வடிந்து ஓட கண்டேன்…

பெண் : முத்தோ மணியோ எல்லாம் கவிதை…
எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது…

ஆண் : சொல்லித்தந்தது உந்தன் பார்வை…
அள்ளித்தந்தது உந்தன் ஜாடை…
பெண் : அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்…

ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா…

—BGM—

பெண் : நேரமுண்டு காலமுண்டு மாலையிட சொந்தமுண்டு…
மாலையிட்ட பின்னால் இந்த சோலைக்கிளி கொஞ்சும் வந்து…

ஆண் : பொன்னே பூவே எல்லாம் குறும்பு…
எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது…

பெண் : அச்சம்தந்தது உந்தன் வேகம்…
வெட்கம் தந்தது உந்தன் மோகம்…
ஆண் : அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்…

பெண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தவரே…
காதல் வேகம் அந்த சோகம் கண்டு கொள்ள…
மஞ்சள் போட்டு தந்தால் என்னையா…

ஆண் : ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா…


Notes : Aanantha Thenn Song Lyrics in Tamil. This Song from Mann Vasanai (1983). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆனந்த தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading