ஏலே லாமா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் பிரகாஷ், கார்த்திக், ஸ்ருதி ஹாசன் & பாப் ஷாலினிஹாரிஸ் ஜெயராஜ்ஏழாம் அறிவு

Yellae Lama Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏலே லாமா ஏலே ஏலமா…
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா…
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா…
வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா…

ஆண் : என் ஜன்னல் கதவிலே…
இவள் பார்வை பட்டு தெறிக்க…
ஒரு மின்னல் பொழுதிலே…
உன் காதல் என்னை இழுக்க…
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க…

ஆண் : ஏலே லாமா…
பெண் : ஏலே ஏலமா…
ஆண் : சொல்லாமலே…
பெண் : உள்ளம் துள்ளுமா…

ஆண் : நெஞ்சோரமா…
பெண் : நெஞ்சின் ஓரமா…
ஆண் : வந்தாலம்மா…
பெண் : வெள்ளம் அள்ளுமா…

பெண் : என் ஜன்னல் கதவிலே…
இவன் பார்வை பட்டு தெறிக்க…
ஒரு மின்னல் பொழுதிலே…
உன் காதல் என்னை இழுக்க…
என் காலும் விண்ணில் தாவி அது குதிக்க…

—BGM—

ஆண் : அடி நியூட்டன் ஆப்பிள் விழ…
புவி ஈர்ப்பை கண்டானடி…
இன்று நானும் உன்னில் விழ…
விழி ஈர்ப்பை கண்டேனடி…

பெண் : ஓசை கேட்காமலே…
இசை அமைத்தான் பீதோவனே…
நீ என்னை கேட்காமலே…
என்னை காதல் செய் நண்பனே…

ஆண் : உத்துமதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே…
குப்பைகூடை போல் நெஞ்ச கலைச்சவ நீதானே…
மேலும் மேலும் அழகாய் மாறி போனேன் நானே…

ஆண் : ஏலே லாமா ஏலே ஏலமா…
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா…

பெண் : நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா…
வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா…

ஆண் : என் ஜன்னல் கதவிலே…
இவள் பார்வை பட்டு தெறிக்க…

பெண் : ஒரு மின்னல் பொழுதிலே…
உன் காதல் என்னை இழுக்க…

ஆண் : என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க…

—BGM—

பெண் : சிறு நேரம் இல்லாமலே…
துளி நீரும் இல்லாமலே…
இள வெயிலும் படாமலே…
பூ பூக்கும் இன்பம் தந்தாய்…

ஆண் : தோளில் விழாமலே…
கை சிறிதும் படாமலே…
உன் நிழலும் தொடாமலே…
நீ என்னை கொள்ளை இட்டாய்…

பெண் : இருவரும் மட்டும் வாழ…
பூமி ஒன்று செய்வோமா…
இரவொன்றே போதும் என்று…
பகலிடம் சொல்வோமா…

ஆண் : வேறு வேலை ஏதும் இன்றி…
காதல் செய்வோம் வா வா…

பெண் : ஏலே லாமா…
ஆண் : ஏலே ஏலமா…
பெண் : சொல்லாமலே…
ஆண் : உள்ளம் துள்ளுமா…
ஆண் : நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா…
வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா…

ஆண் : என் ஜன்னல் கதவிலே…
இவள் பார்வை பட்டு தெறிக்க…
ஒரு மின்னல் பொழுதிலே…
உன் காதல் என்னை இழுக்க…
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க…

—BGM—


Notes : Yellae Lama Song Lyrics in Tamil. This Song from 7 Aum Arivu (2011). Song Lyrics penned by Na. Muthukumar. ஏலே லாமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading