ஏதேதோ பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அஜேஷ் அசோக் & ஹரிணிஜி. வி. பிரகாஷ் குமார்மீண்டும் ஒரு காதல் கதை

Yedhedho Pennae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏதேதோ பெண்ணே நீ வந்ததாலே…
தண்ணீரில் இலை போல் மிதக்கிறேன்…

பெண் : என் காற்றில் இன்று…
உன் சுவாசம் தேடி…
இன்றேனோ விண்ணோடு பறக்கிறேன்…

ஆண் : என் ஆசை நினைப்பது ஏராளம்…
என்றாலும் என்னிடம் மொழி இல்லை…

பெண் : பெண் ஆசை மறைப்பது ஏராளம்…
அதை எல்லாம் சொல்லிட வழி இல்லை…

ஆண் : ஓ… அன்பே என் அன்பே…
என் இதயத்தை…
உன் கையில் நான் தந்தேன்…
ஓர் கடிதத்தை…

பெண் : உன் இதயம் என் வசத்தில்…
என் இதயம் உன் தடத்தில்…

ஆண் : இருவருமே ஓர் இடத்தில்…
காதலெனும் கலவரத்தில்… ஹோ…

—BGM—

ஆண் : அன்பே என் ஞாபகம் தீண்டி…
உன் தூக்கம் தொலைந்ததா…

பெண் : அங்கே என் யோசனை வந்தே…
உன் ஏக்கம் அலைந்ததா…

ஆண் : காதலின் கைகளில்…
பொம்மையாய் உடைகிறேன்…

பெண் : காயங்கள் உண்மையில்…
இன்பம்தான் அறிகிறேன்…

ஆண் : உன் இதயம் என் வசத்தில்…
என் இதயம் உன் தடத்தில்…

—BGM—

பெண் : வெவ்வேறு வேர்களில் பிறந்தோம்…
நம் காதல் இணையுமா…

ஆண் : மனம் ஒன்றி சேர்ந்திடும் போது…
மெய்க்காதல் இறக்குமா…

பெண் : காலத்தை காதலால்…
வென்று நாம் வாழுவோம்…

ஆண் : காதலே உண்மையில்…
அன்பென பாடுவோம்…

பெண் : உன் இதயம் என் வசத்தில்…
என் இதயம் உன் தடத்தில்…

ஆண் : ஏதேதோ பெண்ணே நீ வந்ததாலே…
தண்ணீரில் இலை போல் மிதக்கிறேன்…

பெண் : என் காற்றில் இன்று…
உன் சுவாசம் தேடி…
இன்றேனோ விண்ணோடு பறக்கிறேன்…

ஆண் : என் ஆசை நினைப்பது ஏராளம்…
என்றாலும் என்னிடம் மொழி இல்லை…

பெண் : பெண் ஆசை மறைப்பது ஏராளம்…
அதை எல்லாம் சொல்லிட வழி இல்லை…

—BGM—


Notes : Yedhedho Pennae Song Lyrics in Tamil. This Song from Meendum Oru Kadhal Kadhai (2016). Song Lyrics penned by Na. Muthukumar. ஏதேதோ பெண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading