ஏ ராசா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்யுவன் ஷங்கர் ராஜாஇளையராஜாமாமனிதன்

Ye Rasa Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெனச்சதொன்னு நெனச்சதொன்னு…
நெனச்சதொன்னு… ஹோ ஹோ ஹோ…

ஆண் : நெனச்சதொன்னு நடந்ததொன்னு…
ஏ ராசா…
நீ கேட்டதொன்னு கெடச்சதொன்னு…
ஏ ராசா…

ஆண் : ஆடி ஓடி அலைஞ்சதென்ன…
ஏ ராசா…
நீ ஒன்னைத்தேடி தொலைச்சதென்ன…
ஏ ராசா…

ஆண் : வாழ்க்கை ஒன்னும் பாரம் இல்ல…
வா லேசா…
நம்பிக்கையை விட்டுவிடாத…
வா ராசா…

ஆண் : தன்னம்ம்பிக்கை ஒன்னே ஒன்னு…
போதாதா…
ஒன் சோகம் தீரும் பாதை மாறும்…
வா ராசா…

ஆண் : நெனச்சதொன்னு நடந்ததொன்னு…
ஏ ராசா…
நீ கேட்டதொன்னு கெடச்சதொன்னு…
ஏ ராசா… ஹே ஏ…

BGM

ஆண் : தன்னால எதுவும் இங்க…
மாறப்போறதில்லை…
முன்னால நீயும் எழுந்து வா மெல்ல…

ஆண் : யாரால ஆகுமுன்னு…
மலைச்சுப்போயி நின்ன…
உன்னால எதுவும் முடியும் வா முன்ன…

ஆண் : எல்லாருக்கும் நேரம் வரும்…
நல்லாருக்கும் காலம் வரும்…
மாற்றங்கள்தான் மாறாதது…
உன் வாழ்க்கையும் கைமாறுது…

ஆண் : அப்பப்போ தெய்வமும் குட்டிவிடும்…
அப்பத்தான் புத்தி வரும்…
எண்ணங்கள் உன்னிடம் சுத்தம் என்றால்…
வெற்றி உன்னை சுற்றி வரும்…

ஆண் : நெனச்சதொன்னு நடந்ததொன்னு…
ஏ ராசா…
நீ கேட்டதொன்னு கெடச்சதொன்னு…
ஏ ராசா…

BGM


Notes : Ye Rasa Song Lyrics in Tamil. This Song from Maamanithan (2021). Song Lyrics penned by Pa Vijay. ஏ ராசா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top