யாரோடு யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்யுவன் ஷங்கர் ராஜா & உஸ்தாத் சுல்தான் கான்யுவன் ஷங்கர் ராஜாயோகி

Yaarodu Yaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோடு யாரோ…
இந்த சொந்தம் என்ன பேரோ…
நேற்று வரை நீயும் நானும்…
யாரோ யாரோ தானோ…

ஆண் : ஓர் ஆளில்லா வானில்…
கருமேகங்களின் காதல்…
கேட்க இடி மின்னல் நெஞ்சை நனைக்குமோ…

ஆண் : வஞ்சம் கொண்ட நெஞ்சம்…
உருகுது கொஞ்சம்…
சிறுகதை தொடர்கதை ஆகுமோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இது என்ன மாயம்…
சூரியனில் ஈரம்…
வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ…

ஆண் : நதி வந்து கடல்மீது சேரும்போது…
புயல் வந்து மலரோடு மோதும்போது…
மழை வந்து வெயிலோடு கூடும்போது…
யாரோடு யாருமிங்கே…

ஆண் : வஞ்சம் கொண்ட நெஞ்சம்…
உருகுது கொஞ்சம்…
சிறுகதை தொடர்கதை ஆகுமோ…

ஆண் : இது என்ன மாயம்…
சூரியனில் ஈரம்…
வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ…

BGM

ஆண் : இதயங்கள் சேரும்…
நொடிக்காக யாரும்…
கடிகாரம் பார்ப்பது இல்லையே…

ஆண் : நீரோடு வேரும்…
வேரோடு பூவும்…
தொடர்கின்ற நேசங்கள் வாழ்க்கையே…

ஆண் : ஓர் உறவும் இல்லாமல் உணர்வும் சொல்லாமலே…
புது முகவரி தேடுதோ…
வாய்மொழியும் இல்லாமல் வழியும் சொல்லாமல்…
பாசக்கலவரம் சேர்க்குதோ…

ஆண் : ஒரு மின்மினியே மின்சாரத்தை தேடி வரும் போது…
என்ன நியாயம் கூறு விதிதானே…

BGM

ஆண் : பறவைக்கு காற்று பகையானால் கூட…
சிறகுக்கு சேதம் இல்லையே…
துளையிட்ட மூங்கில் தாங்கிய இரணங்கள்…
இசைக்கின்றபோதும் இன்பமே…

ஆண் : சிறு விதையும் இல்லாமல் கருவும் கொள்ளாமலே…
இங்கு ஜனனமும் ஆனதே…
ஒரு முடிவும் இல்லாமல் முதலும் இல்லாமல்…
காலம் புதிர்களைப் போடுதே…

ஆண் : அட அருகம்புல்லின் நுனியில் ஏறி…
நிற்கும் பனி போலே…
எத்தனை நாள் வாழ்க்கை தெரியாதே…

BGM

ஆண் : வஞ்சம் கொண்ட நெஞ்சம்…
உருகுது கொஞ்சம்…
சிறுகதை தொடர்கதை ஆகுமோ…


Notes : Yaarodu Yaaro Song Lyrics in Tamil. This Song from Yogi (2009). Song Lyrics penned by Snehan. யாரோடு யாரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading