ஆவாரம் பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சின்மயிஎஸ்.எஸ்.குமரன்பூ

Aavaram Poo Song Lyrics in Tamil


பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே…
யாருக்கு காத்திருக்கு…
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே…
உனக்காக பூத்திருக்கு…

BGM

பெண் : சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை…
அது சொல்லாமல் போனாலும் புரியாதா…

பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே…
யாருக்கு காத்திருக்கு…
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே…
உனக்காக பூத்திருக்கு…

BGM

பெண் : காற்றில் ஆடி தினந்தோறும்…
உனது திசையை தொடருதடா…
குழந்தை கால ஞாபகத்தில்…
இதழ்கள் விரித்தேக் கிடக்குதடா…

பெண் : நெடுநாள் அந்த நெருக்கம்…
நினைத்தே அது கிடக்கும்…
சருகுகள் சத்தம் போடும்…
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்…
அதன் வார்த்தை எல்லாம் மௌனமாகும்…

பெண் : சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை…
அது சொல்லாமல் போனாலும் புரியாதா…

பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே…
யாருக்கு காத்திருக்கு…
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே…
உனக்காக பூத்திருக்கு…

BGM

பெண் : ஆயுள் முழுதும் தவம் கிடந்தே…
ஒற்றை காலில் நிற்குதடா…
மாலையாகி தவழ்ந்திடவே…
உனது மார்பை கேட்குதடா…

பெண் : பனியில் அது கிடக்கும்…
நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்…
வண்ணங்கள் எல்லாம் நீதான்…
அதன் வாசங்கள் எல்லாம் நீதான்…
நீ விட்டு சென்றால் பட்டு போகும்…

பெண் : சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை…
அது சொல்லாமல் போனாலும் புரியாதா…

பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே…
யாருக்கு காத்திருக்கு…
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே…
உனக்காக பூத்திருக்கு…


Notes : Aavaram Poo Song Lyrics in Tamil. This Song from Poo (2008). Song Lyrics penned by Na. Muthukumar. ஆவாரம் பூ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading