| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ஏ. மருதகாசி | டி.எம். சௌந்தரராஜன் | கே.வி. மகாதேவன் | விவசாயி |
Vivasaayi Song Lyrics in Tamil
ஆண் : விவசாயி விவசாயி…
ஆண் : கடவுள் என்னும் முதலாளி…
கண்டெடுத்த தொழிலாளி…
விவசாயி விவசாயி…
ஆண் : கடவுள் என்னும் முதலாளி…
கண்டெடுத்த தொழிலாளி…
விவசாயி விவசாயி…
—BGM—
ஆண் : முன்னேற்ற பாதையிலே மனச வைத்து…
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து…
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து…
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து…
ஆண் : மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ…
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ…
வழங்கும் குணம் உடையோன் விவசாயி…
ஆண் : விவசாயி விவசாயி…
—BGM—
ஆண் : என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்…
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்…
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்…
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்…
ஆண் : ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்…
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்…
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்…
ஆண் : விவசாயி விவசாயி…
—BGM—
ஆண் : கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்…
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்…
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்…
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்…
ஆண் : பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி…
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி…
உழைத்தால் பெறுகாதோ சாகுபடி…
ஆண் : விவசாயி விவசாயி…
—BGM—
ஆண் : இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி…
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி…
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி…
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி…
ஆண் : பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி…
அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி…
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி…
ஆண் : விவசாயி விவசாயி…
ஆண் : கடவுள் என்னும் முதலாளி…
கண்டெடுத்த தொழிலாளி…
விவசாயி விவசாயி…
Notes : Vivasaayi Song Lyrics in Tamil. This Song from Vivasaayi (1967). Song Lyrics penned by A. Maruthakasi. விவசாயி பாடல் வரிகள்.
