விளக்கேத்து விளக்கேத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்இளையராஜாபேர் சொல்லும் பிள்ளை

Vilakethu Vilakethu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை…
விளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை…
விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை…
விளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை…

ஆண் : உணர்வின்றிக் கிடந்தா…
உழைக்காம இருந்தா…
வருங்காலம் நமக்கு வளமாக வருமா…
வந்தாச்சு வந்தாச்சு வருங்காலம் நமக்கு…

குழு : விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை…
விளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை…

—BGM—

ஆண் : வாட்டிடும் பசியோட கண்ணு முழிச்சோம்…
வாடாம பொறுப்போட செஞ்சு முடிச்சோம்…
தாமரப் பூவாக அகம் மலரும்…
தாய் முகம் மறக்காம நித்தம் நெனச்சோம்…

ஆண் : கையில இருக்கும் வேல…
அது கண்டிடும் பண்டிக நாள…
நெஞ்சுல உள்ளது போல…
அட நிம்மதி வந்திடும் மேல…

ஆண் : பணத்தாலே நிம்மதிதான்…
குழு : கிடைக்காது கிடைக்காது…
ஆண் : பணக்காரன் மனசுக்குத்தான்…
குழு : அது ஏது அது ஏது…

ஆண் : பசிச்சாலும் தவிச்சாலும்…
ஏழைங்க வீட்டுல நிம்மதி உண்டு…

குழு : விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை…
விளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை…

ஆண் : ஹேய்…
குழு : விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை…
விளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை…

ஆண் : உணர்வின்றிக் கிடந்தா…
உழைக்காம இருந்தா…
வருங்காலம் நமக்கு வளமாக வருமா…
வந்தாச்சு வந்தாச்சு வருங்காலம் நமக்கு…

குழு : விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை…
விளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை…

—BGM—

ஆண் : ஓடிடும் நதி போல மனசிருந்தா…
அது சேர்ந்திடும் இடம் எல்லாம் செழித்திருக்கும்…
ஊருல உன் போல உள்ளம் வருமா…
பேருல உன் பேரச் சொல்ல வருமா…

ஆண் : சொத்துக்கு சுத்துவதாரு…
இங்கு நித்தமும் அழுவதாரு…

குழு : உத்தம புத்திரன் யாரு இங்கு…
சத்தியம் உள்ளவர் யாரு…

ஆண் : நேர் செல்லும் ஒரு பிள்ளை…
குழு : நீதானே நீதானே…

ஆண் : பேர் சொல்லும் ஒரு பிள்ளை…
குழு : நீதானே நீதானே…

குழு : வளர்ந்தாச்சு உயர்ந்தாச்சு
என்றைக்கும் என்றைக்கும் ராஜாதி ராஜா…

குழு : விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை…
விளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை…

குழு : விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை…
விளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை…

ஆண் : உணர்வின்றிக் கிடந்தா…
உழைக்காம இருந்தா…
வருங்காலம் நமக்கு வளமாக வருமா…
வந்தாச்சு வந்தாச்சு வருங்காலம் நமக்கு…

குழு : விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை…
விளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை…

ஆண் : ஹேய்…
குழு : விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை…
விளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை…


Notes : Vilakethu vilakethu Song Lyrics in Tamil. This Song from Per Sollum Pillai (1987). Song Lyrics penned by Gangai Amaran. விளக்கேத்து விளக்கேத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading