என் கண்ணனுக்கு காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராமரகதமணிபிரதாப்

En Kannanukku Song Lyrics in Tamil


—BGM—

பெண் : என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்…
ஆண் : என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்…
பெண் : என் பெண்மை எல்லம் உந்தன் சீதனம்…
ஆண் : உன் சீதனங்கள் என்ன நூதனம்…

பெண் : முடியவில்லை காதல் க‌ண்ணா மோக நர்த்தனம்…
விடிய விடியக் கேட்குதையா உனது கீர்த்தனம்…

ஆண் : சொர்க்கம் தாண்டிச் செல்லுமம்மா எனது சொப்பனம்…
போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்…

குழு : தனனா…
பெண் : என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்…
குழு : தனனா…
ஆண் : என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்…

—BGM—

குழு : தானனா தஜிம் தஜீம் தஜீம் ஜீம்…
பெண் : தானன த‌ந்தானன தஜீம் தஜீம்…
ஆண் : தஜீம் தஜீம்…

—BGM—

பெண் : ஓ… காதல் கண்ணாளா இன்று என்ன பொன்னாளா…
நீ மறந்து கையோடு கை சேர்க்கும் காதல் விழா…

ஆண் : ஓ… கன்னிப் புறாவே கால் முளைத்த நிலாவே…
மெல்ல மெல்ல உன் பேரைச் சொன்னாலும் வாய் ஊறுதே…

பெண் : மல்லிகை மொட்டை மன்னவன் வந்து…
கிள்ளி முடித்தானே…

ஆண் : மன்மதன் என்னை வந்திடச் சொல்லி…
தந்தி அடித்தானே…

பெண் : வல்லவனே…
குழு : தந்தனனா…
பெண் : நல்லவனே…
கட்டிலில் ஆயிரம் கட்டளை இட்டவனே…

குழு : தனனா…
பெண் : என் கண்ணனுக்கு காதல் வந்தனம்…
குழு : தனனா…
ஆண் : என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்…

பெண் : முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்…
ஆண் : போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்…

—BGM—

ஆண் : ஓ… ராஜகுமாரி ரகசிய சிருங்காரி…
மெல்ல எந்தன் காதோடு நீ பாடு கான‌ல் வரி…

பெண் : ஓ… தேவ குமாரா கண்மயங்கும் சிங்காரா…
உன்னிரண்டு தோளோடு உறவாடும் காதல் புறா…

ஆண் : கட்டில் அறையில் கண்ணு முழிச்சா சொர்க்கம் கிட்டுமடி…
பெண் : அத்தானுக்கு அந்த விஷயம் எல்லாம் அத்துப்படி…

ஆண் : கட்டிப்புடி…
குழு: தந்தனனா…
ஆண் : தொட்டுப் படி…
மூன்றாம் பாலில் முன்னோர் சொன்னபடி…

பெண் : என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்…
ஆண் : என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்…
பெண் : என் பெண்மை எல்லாம் உந்தன் சீதனம்…
ஆண் : உன் சீதனங்கள் என்ன நூதனம்…

பெண் : முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்…
விடிய விடியக் கேட்குதையா உனது கீர்த்தனம்…

ஆண் : சொர்க்கம் தாண்டிச் செல்லுமம்மா எனது சொப்பனம்…
போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்…

—BGM—


Notes : En Kannanukku Song Lyrics in Tamil. This Song from Pratap (1993). Song Lyrics penned by Vairamuthu. என் கண்ணனுக்கு காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading