அர்ஜுனரே அர்ஜுனரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராமரகதமணிபிரதாப்

Arjunare Arjunare Song Lyrics in Tamil

—BGM—

பெண் : அர்ஜுனரே அர்ஜுனரே ஆசையுள்ள அர்ஜுனரே…
அழகான வில் வளைத்து அம்பு விடுவது எக்காலம்…

ஆண் : பெண்ணழகே பெண்ணழகே பெண்கள் ஏங்கும் பேரழகே…
பின்னழகும் முன்னழகும் பின்னுவது எக்காலம்…

—BGM—

ஆண் : ஓடையில நீ தொவைக்க…
உன்ன வந்து நான் தொவைக்க…
சாடையில நீ அழைக்க தழுவுவது எக்காலம்…

பெண் : ஆத்தங்கரையோரம் ஆலமரம் அடையாளம்…
ஆலமரத்தடியில் அள்ளுவதும் எக்காலம்…

ஆண் : அந்தி மசங்க விட்டு…
ஆத்தாள உறங்க விட்டு…
கொலுசு சத்தம் என்னை கூப்பிடுவது எக்காலம்…

பெண் : ஆடி மழையடிக்க…
அத்தான் வந்து குடைபிடிக்க…

—BGM—

பெண் : ஆடி மழையடிக்க…
அத்தான் வந்து குடைபிடிக்க…
நனையாம ரெண்டுபேரும் நனைவதுவும் எக்காலம்…
எக்காலம்…

ஆண் : பெண்ணழகே பெண்ணழகே பெண்கள் ஏங்கும் பேரழகே…
பின்னழகும் முன்னழகும் பின்னுவது எக்காலம்…

—BGM—

பெண் : ஊருக்கு தெக்குப்பக்கம்…
ஒத்தப்பனை அக்கம் பக்கம்…
யாருக்கும் தெரியாம அணைவதுவம் எக்காலம்…

ஆண் : கல்லூரும் சோலையில…
கருக்கிருட்டு வேலையில…
உள்ளூரு கிளியோடு ஒதுங்குவது எக்காலம்…

பெண் : சக்கம்பட்டி நூல்சேலை சாயம் மெல்லாம் போகும் மட்டும்…
முத்தமிட்டு முத்தமிட்டு முனுகுவது எக்காலம்…

ஆண் : ஆத்துத் தடம்பாத்தே அடையாளம் சொல்லுவேண்டி…

—BGM—

ஆண் : ஆத்துத் தடம்பாத்தே அடையாளம் சொல்லுவேண்டி…
மத்த தடம் பாத்து மயங்குவது எக்காலம்…
எக்காலம்…

பெண் : அர்ஜுனரே அர்ஜுனரே ஆசையுள்ள அர்ஜுனரே…
அழகான வில் வளைத்து அம்பு விடுவது எக்காலம்…

ஆண் : பெண்ணழகே பெண்ணழகே பெண்கள் ஏங்கும் பேரழகே…
பின்னழகும் முன்னழகும் பின்னுவது இக்காலம்…

Notes : Arjunare Arjunare Song Lyrics in Tamil. This Song from Pratap (1993). Song Lyrics penned by Vairamuthu. அர்ஜுனரே அர்ஜுனரே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading