தாஜ்மஹாலே நீ தாவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & அனுராதா ஸ்ரீராம்தேவாபெரியதம்பி

Taju Mahalae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாஜ்மஹாலே நீ தாவி தாவி…
எந்தன் வாசல் வந்தது என்ன…
தங்க நிலாவே நீ விண்ணை விட்டு…
என்னை காண வந்தது என்ன…

பெண் : உயிர் தொட்ட உறவே…
நான் எந்தன் வாழ்வில் உன்னை தேடி அலைந்தது என்ன…
உன் பாதம் பட்டு உன் காற்று தொட்டு…
என் சோலை இன்று பூத்தது என்ன…

ஆண் : தாஜ்மஹாலே நீ தாவி தாவி…
எந்தன் வாசல் வந்தது என்ன…

—BGM—

பெண் : உள்ளம் முழுக்க நேசம் வைத்தால் குறை தெரியாது…
வெள்ளி நிலவை கண்கள் ரசித்தால் கரை தெரியாது…
உள்ளம் முழுக்க நேசம் வைத்தால் குறை தெரியாது…
வெள்ளி நிலவை.கண்கள் ரசித்தால் கரை தெரியாது…

ஆண் : கண்ணே உன் முகம் கண்டதும் என் மனம்…
காதல் கொண்டது காதல் கொண்டது…
கண்ணே உன் மனம் கண்டதும் என் விழி…
ஏனோ கொண்டது கண்ணீர்…

ஆண் : கண்ணே உன் முகம் கண்டதும் என் மனம்…
காதல் கொண்டது காதல் கொண்டது…
கண்ணே உன் மனம் கண்டதும் என் விழி…
ஏனோ கொண்டது கண்ணீர்…

பெண் : ஒரே மனம் ஒரே குணம்…
ஒரே நிலை இன்பம்…

ஆண் : தாஜ்மஹாலே நீ தாவி தாவி…
எந்தன் வாசல் வந்தது என்ன…

—BGM—

பெண் : எந்தன் பெயரை உந்தன் உயிரில் எழுதி வைப்பாயா…
இன்னும் சில நாள் சென்ற பிறகு மறந்து வைப்பாயா…
எந்தன் பெயரை உந்தன் உயிரில் எழுதி வைப்பாயா…
இன்னும் சில நாள் சென்ற பிறகு மறந்து வைப்பாயா…

ஆண் : காற்றும் மழையும் கதிரும் ஒரு நாள்…
நின்றே போய்விடும் நின்றே போய்விடும்…
கண்ணே நமது காதல் உறவுகள்…
வென்றே வாழ்ந்திடும் என்றும்…

ஆண் : காற்றும் மழையும் கதிரும் ஒரு நாள்…
நின்றே போய்விடும் நின்றே போய்விடும்…
கண்ணே நமது காதல் உறவுகள்…
வென்றே வாழ்ந்திடும் என்றும்…

பெண் : இதே வரம் இதே மனம்…
இதே சுகம் வேண்டும்…

ஆண் : தாஜ்மஹாலே நீ தாவி தாவி…
எந்தன் வாசல் வந்தது என்ன…
தங்க நிலாவே நீ விண்ணை விட்டு…
என்னை காண வந்தது என்ன…

பெண் : உயிர் தொட்ட உறவே…
நான் எந்தன் வாழ்வில் உன்னை தேடி அலைந்தது என்ன…
உன் பாதம் பட்டு உன் காற்று தொட்டு…
என் சோலை இன்று பூத்தது என்ன…

ஆண் : தாஜ்மஹாலே நீ தாவி தாவி…
எந்தன் வாசல் வந்தது என்ன…

—BGM—


Notes : Taju Mahalae Song Lyrics in Tamil. This Song from Periya Thambi (1997). Song Lyrics penned by Vairamuthu. தாஜ்மஹாலே நீ தாவி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading