விலகாதே எனதுயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஜோஷ்வா ஸ்ரீதர்ஒரு குப்பைக் கதை

Vilagaadhe Enadhuyirae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…

ஆண் : பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…

ஆண் : அன்பே அன்பே என் காதல் பொய்யில்லையே…
அன்பே அன்பே அதை சொல்ல வழியில்லையே…
அன்பே அன்பே நீ இன்றி நான் இல்லையே…
அட கடவுள் தந்த வரம் கையில் வந்தவுடன் பிரிந்து போகின்றதே…

ஆண் : விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…

ஆண் : பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…

—BGM—

ஆண் : மானே ஏனோ உந்தன் மௌனம் புரியவில்லை…
உன்னை தேற்ற ஒரு மொழியும் கையிலில்லை…
ஆனால் உன் மேல் உள்ள காதலும் குறையவில்லை…

ஆண் : வழி தெரியாத ஒளி தெரியாத…
ஒரு வித காட்டில் மாட்டி கொண்டேன்…
என்னை அறியாமல் நீ செல்லும் போது காயம் கொண்டேனே…
காலம் என் காதல் உந்தன் காதில் சொல்லிடுமே…

ஆண் : அன்பே அன்பே என் காதல் பொய்யில்லையே…
அன்பே அன்பே அதை சொல்ல வழியில்லையே…
அன்பே அன்பே நீ இன்றி நான் இல்லையே…
அட கடவுள் தந்த வரம் கையில் வந்தவுடன் பிரிந்து போகின்றதே…

—BGM—

ஆண் : தனிமை தீவில் என் நாட்கள் ஓடுதடி…
பெண்ணே விழியில் உன் முகமே தெரியுதடி…
ஆஆ… ஒரு நாள் வருவாய் என்று எல்லாம் ஏங்குதடி…

ஆண் : சிறு பிள்ளை தவறை தாய் அறிவாலே…
அது போல் என்னை மன்னிப்பாயா…
இடைவெளி இன்னும் கூடிட நீயும் தண்டிப்பாயோ…
சொல்காலம் என் காதல் உந்தன் காதில் சொல்லிடுமே…

ஆண் : விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…

ஆண் : ஓஹோஓ… பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே… ஹோ ஓஓ…

—BGM—

ஆண் : எனதுயிரே…

—BGM—


Notes : Vilagaadhe Enadhuyirae Song Lyrics in Tamil. This Song from Oru Kuppai Kathai (2015). Song Lyrics penned by Na. Muthukumar. விலகாதே எனதுயிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading