வெண்ணிற இரவுகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன்ராஜன்கபில் கபிலன்தீபன் சக்ரவர்த்திசரிகம தமிழ்

Vennira Iravugal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மாலை வான் மேகம் ஏதோ பேசி போகுதே…
சாரல் வீசாமல் தானாய் ஈரம் சேர்கின்றதே…
எதிர் நானும் பாரமலே…
வீழ்ந்தேன் உன் பார்வை தாங்கமலே…

ஆண் : இரு விரல்களில் காதல்…
இடைவெளிகளை மூடும்…
மனம் மிதக்குதே மழை அடிக்குதே…
என்னை மீறி எந்தன் காதல் மிளிருதே…

ஆண் : உயிர் முழவதும் தூறல்…
கடலென எனை சேர…
அலையடிக்குதே அடம்பிடிக்குதே…
உந்தன் அன்பில் எந்தன் வாழ்வு மலருதே…

ஆண் : முதல்முறை அடை மழை உயிரிலே விழுந்ததே…
நிஜமும் நிழலதும் இரண்டற கலந்ததே…
உடல் மிதந்ததே உலகம் மறந்ததே…
காதலின் லீலையோ…

ஆண் : நடப்பதை ரசித்திட நினைவுக்குதே ஒரு கனம்…
நினைவில் மிதந்திட தவிக்குதே மருகனம்…
எடை குறையுதே இதயம் நிறையுதே…
காற்றிலே காகிதம் நானோ…

—BGM—

ஆண் : ஒரு பார்வையில் இறகாகிறேன்…
அடி நிழலென நெருங்கிட முடியலையே…
ஒரு நிலவினை நெருங்கிட வழி இல்லையா…

ஆண் : விழி விடாமல் கூச…
விரல் தொடாமல் பேச…
மனம் மிகாமல் யேச…
ஒரு வினோதா ஆச…

ஆண் : மழை உன் பார்வை வீச…
என் நெஞ்சோடு ஓச…
அடி எப்போதும் ஏங்கும்…
இன்றும் வராத மீச…

—BGM—

ஆண் : மெஹந்தியோடு மிதந்து ஓடு…
உனையும் நீயே எனக்குள் தேடு…
விருப்பம் நீங்கி விலகும் போது…
உயிரும் ஏது…

—BGM—

ஆண் : சிரிக்கும் நேரம் சிதஞ்சு போறேன்…
கடக்கும் நேரம் கலஞ்சி போறேன்…
விளக்கும் நேரம் உசுரில் மட்டும் ஒடஞ்சி போறேன்…

—BGM—

ஆண் : என் நேற்றிலே தோழியாள் தோளில் சாய்ந்தாய்…
என் மூச்சிலே பாதியாய் நீயும் ஆனாய்…
சில நேரம் காதல் கனவாகி போகும்…
பல நேரம் காதல் கதையாகி நீளும்…

ஆண் : நினைவினை சுமந்தது போதும்…
நிஜங்களில் வலித்தது போதும்…
வருவதை பழகிடு நாளும்…
வாழ்விங்கு மாயம்…

ஆண் : பறவையின் வழித்தடம் யாவும்…
மறு நொடி மறைந்திடும் மேகம்…
எதுவுமே கடந்திடும் நேரம்…
நாளை ஒன்று கண்கள் முன்னே விடியுமே…

ஆண் : முதல்முறை அடை மழை உயிரிலே விழுந்ததே…
நிஜமும் நிழலதும் இரண்டற கலந்ததே…
உடல் மிதந்ததே உலகம் மறந்ததே…
காதலின் லீலையோ…

ஆண் : நடப்பதை ரசித்திட நினைவுக்குதே ஒரு கனம்…
நினைவில் மிதந்திட தவிக்குதே மறுகனம்…
எடை குறையுதே இதயம் நிறையுதே…
காற்றிலே காகிதம் நானோ…

—BGM—


Notes : Vennira Iravugal Song Lyrics in Tamil. This Song from Saregama Tamil (2024). Song Lyrics penned by Mohanrajan. வெண்ணிற இரவுகள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading