வழி விடு வழி விடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & இளையராஜாஇளையராஜாபாட்டு படவா

Vazhi Vidu Vazhi Vidu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வழி விடு வழி விடு வழி விடு…
என் தேவி வருகிறாள்…
விலகிடு விலகிடு விலகிடு…
எனைத் தேடி வருகிறாள்…

ஆண் : எவனவன் வாசலை அடைப்பது…
இடையில் திரையினை விரிப்பது…
எவனவன் தடைகளை விதிப்பது…
இளைய நிலவினைத் தடுப்பது…
என் இதயக் கோயிலில் கதவில்லை கதவில்லை…

ஆண் : வழி விடு வழி விடு வழி விடு…
என் தேவி வருகிறாள்…

—BGM—

ஆண் : வழி விடு வழி விடு வழி விடு…
என் தேவி வருகிறாள்…
விலகிடு விலகிடு விலகிடு…
எனைத் தேடி வருகிறாள்…

ஆண் : எவனவன் வாசலை அடைப்பது…
இடையில் திரையினை விரிப்பது…
எவனவன் தடைகளை விதிப்பது…
இளைய நிலவினைத் தடுப்பது…
என் இதயக் கோயிலில் கதவில்லை கதவில்லை…

ஆண் : வழி விடு வழி விடு வழி விடு…
என் தேவி வருகிறாள்…

—BGM—

ஆண் : பனிமலர் விழி வழி பாவை சொல்வாள்…
கேட்காத சேதிகள்… ஓ…
தினசரி அவள் வர ஏங்கும் எந்தன்…
நாள் காட்டும் தேதிகள்… ஓ…

ஆண் : என் மீதுதான் அன்பையே…
பொன் மாரியாய்த் தூவுவாள்…
என் நெஞ்சையே பூ என…
தன் கூந்தலில் சூடுவாள்…

ஆண் : நாள் தோறும் ஆராதனை…
செய்கின்ற தேவியே…
என் மூச்சிலே வாழ்கிறாள்…
என் ஜீவன் மேவியே…
நாளும் சிங்காரத் தேரை நான் கூட…

ஆண் : வழி விடு வழி விடு வழி விடு…
என் தேவி வருகிறாள்…
விலகிடு விலகிடு விலகிடு…
எனைத் தேடி வருகிறாள்…

ஆண் : எவனவன் வாசலை அடைப்பது…
இடையில் திரையினை விரிப்பது…
எவனவன் தடைகளை விதிப்பது…
இளைய நிலவினைத் தடுப்பது…
என் இதயக் கோயிலில் கதவில்லை கதவில்லை…

ஆண் : வழி விடு வழி விடு வழி விடு…
என் தேவி வருகிறாள்…

—BGM—

ஆண் : மன நிலை சரி இல்லை பாவம் என்று…
பாசங்கள் காட்டுவாள்… ஓ…
மருத்துவன் ஒருத்தனும் ஆற்றிடாத…
காயங்கள் ஆற்றுவாள்… ஓ…

ஆண் : பூம்பாவையின் சேவைகள்…
பொன் ஏட்டிலே ஏறுமே…
பூலோகமே போற்றியே…
பூபாளமாய் பாடுமே…

ஆண் : ஓர் நாள் அவள் வாராவிடில்…
என் பார்வை தூங்கிடாது…
நான் வாழவே வான் நீங்கியே…
முன் தோன்றும் தேவமாது…
ஆடை மேல் ஆடும் பூவை நான் காண…

ஆண் : வழி விடு வழி விடு வழி விடு…
என் தேவி வருகிறாள்…
விலகிடு விலகிடு விலகிடு
எனைத் தேடி வருகிறாள்…

ஆண் : எவனவன் வாசலை அடைப்பது…
இடையில் திரையினை விரிப்பது…

குழு : எவனவன் தடைகளை விதிப்பது…
இளைய நிலவினைத் தடுப்பது…

ஆண் : என் இதயக் கோயிலில் கதவில்லை கதவில்லை…

ஆண் : வழி விடு வழி விடு வழி விடு…
என் தேவி வருகிறாள்…
விலகிடு விலகிடு விலகிடு…
எனைத் தேடி வருகிறாள்…


Notes : Vazhi Vidu Vazhi Vidu Song Lyrics in Tamil. This Song from Paattu Padava (1995). Song Lyrics penned by Vaali. வழி விடு வழி விடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading