வரவு எட்டணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன், L.R. ஈஸ்வரி & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்பாமா விஜயம்

Varavu Ettana Song Lyrics in Tamil


ஆண் : வரவு எட்டணா…
செலவு பத்தணா…
அதிகம் ரெண்டனா…
கடைசியில் துந்தனா…

குழு : வரவு எட்டணா…
செலவு பத்தணா…
அதிகம் ரெண்டனா…
கடைசியில் துந்தனா துந்தனா துந்தனா…

ஆண் : 1 2 3 4 5 6 7 8… ம்ம்…

குழு : வரவு எட்டணா…
செலவு பத்தணா…
அதிகம் ரெண்டனா…
கடைசியில் துந்தனா துந்தனா துந்தனா…

BGM

குழு : நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால்…
நிம்மதி இருக்காது…
அய்யா நிம்மதி இருக்காது…

குழு : அளவுக்கு மேலே ஆசையும் வந்தால்…
உள்ளதும் நிலைக்காது…
அம்மா உள்ளதும் நிலைக்காது…

BGM

பெண் : வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள…
நல்லது பிடிக்காது…
மாமா நல்லது பிடிக்காது…

குழு : வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள…
நல்லது பிடிக்காது…
மாமா நல்லது பிடிக்காது…

ஆண் : வயசு பிள்ளைகள் புதுசா பெருசா…
வாழ்வது பொறுக்காது…
அப்பா வாழ்வது பொறுக்காது…

குழு : வயசு பிள்ளைகள் புதுசா பெருசா…
வாழ்வது பொறுக்காது…
அப்பா வாழ்வது பொறுக்காது…

ஆண் : வாடகை சோபா…
ஆண் : 20 ருபாய்…
ஆண் : விலைக்கு வாங்கினா…
ஆண் : 30 தே ரூபா…

குழு : வாடகை சோபா…
20 ரூபா…
விலைக்கு வாங்கினா…
30 தே ரூபா…

குழு : வரவு எட்டணா…
செலவு பத்தணா…
அதிகம் ரெண்டனா…
கடைசியில் துந்தனா துந்தனா துந்தனா…

BGM

ஆண் : அடங்கா மனைவி அடிமை புருஷன்…
குடும்பத்துக்காகாது…

குழு : அடங்கா மனைவி அடிமை புருஷன்…
குடும்பத்துக்காகாது…
அய்யா குடும்பத்துக்காகாது…

பெண் : யானையை போலே பூனையும் தின்னா…
ஜீரணமாகாது…
அய்யா ஜீரணமாகாது…

குழு : யானையை போலே பூனையும் தின்னா…
ஜீரணமாகாது…
அய்யா ஜீரணமாகாது…

BGM

ஆண் : பச்சை கிளிகள் பறப்பதை பார்த்தால்…
பருந்துக்கு பிடிக்காது…
அப்பா பருந்துக்கு பிடிக்காது…

குழு : பச்சை கிளிகள் பறப்பதை பார்த்தால்…
பருந்துக்கு பிடிக்காது…
அப்பா பருந்துக்கு பிடிக்காது…

பெண் : பணத்தை பார்த்தால் கௌரவம் என்பது…
மருந்துக்கும் இருக்காது…
மாமா மருந்துக்கும் இருக்காது…

குழு : பணத்தை பார்த்தால் கௌரவம் என்பது…
மருந்துக்கும் இருக்காது…
மாமா மருந்துக்கும் இருக்காது…

ஆண் : தங்க சங்கிலி இரவல் வாங்கினா…
தவறி போச்சுன்னாதகிட தந்தன…

குழு : ஹோ ஹோ ஹோ மாமா…
ஹே ஹே ஹே…

குழு : ஹோ ஹோ ஹோ அப்பா…
ஹே ஹே ஹே…

ஆண் : பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக…
இங்கே எதுக்காக…

குழு : பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக…
இங்கே எதுக்காக…
அய்யா இங்கே எதுக்காக…

ஆண் : மாதர்கள் எல்லாம் கன்னியராக…
மாறனும் அதுக்காக…
அப்பா வேறே எதுக்காக…

பெண் : கன்னியராக மாறனுமென்றால்…
பிள்ளைகள் எதற்காக…
அய்யா பிள்ளைகள் எதற்காக…

ஆண் : காதல் செய்த பாவத்துக்காக…
வேறே எதுக்காக…
அப்பா வேறே எதுக்காக…

ஆண் : பட்டால் தெரியும்…
பழசும் புதுசும்…
கெட்டால் தெரியும்…
கேள்வியும் பதிலும்…

குழு : வரவு எட்டணா…
செலவு பத்தணா…
அதிகம் ரெண்டனா…
கடைசியில் துந்தனா துந்தனா துந்தனா…

குழு : வரவு எட்டணா…
செலவு பத்தணா…
அதிகம் ரெண்டனா…
கடைசியில் துந்தனா துந்தனா துந்தனா…


Notes : Varavu Ettana Song Lyrics in Tamil. This Song from Bama Vijayam (1967). Song Lyrics penned by Kannadasan. வரவு எட்டணா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top