வண்டியில மாமன் பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாதேவாசெல்லக்கண்ணு

Vandiyile Song Lyrics in Tamil


—BGM—

குழு : மேகந்திரளுது மேற்ககருக்குது…
மின்னலடிக்குது பாருங்கடி…
ஏரி தவளைக மேளமடிக்குது…
இப்ப மழை வரப்போகுதடி…

குழு : பூவா பூவா வானம் பொழியணும்…
பூமி செழிக்கனும் பாருங்கடி…
புஞ்சையும் நஞ்சையும் பொண்ணு விளையணும்…
ஏழைங்க வாழனும் வாழ்த்துங்கடி…

—BGM—

ஆண் : வண்டியில மாமன் பொண்ணு…
ஓட்டுறவன் செல்லகண்ணு…
எங்க வீட்டு ராணி வர்றா…
எல்லாம் வந்து பாத்துக்குங்க…

பெண் : பொட்டி வண்டி கட்டிக்கிட்டு…
பொண்ணு மேல ஒட்டிக்கிட்டு…
ராணிக்கு ஏத்த ராசா…
எங்க மாமேன் வர்றார் பாத்துக்குங்க…

ஆண் : கட்டிக்கபோற பொண்ணு…
ஒட்டிக்கிட்டா தப்பில்ல செல்லக்கண்ணு…

பெண் : தப்புன்னு யாரு சொன்னா…
கன்னந்தொட்டு தாளத்த போடு நல்லா…

ஆண் : அட அப்படி போட்டுக்க…
ஆசைய பாத்துக்க டோய்…

ஆண் : வண்டியில மாமன் பொண்ணு…
ஓட்டுறவன் செல்லகண்ணு…
எங்க வீட்டு ராணி வர்றா…
எல்லாம் வந்து பாத்துக்குங்க…

—BGM—

ஆண் : பட்டணத்தில் படிச்ச பொண்ணு…
பாடங்கள முடிச்ச கண்ணு…
காதலென்னும் பாடம் ஒன்னு…
கத்துத்தாடி பக்கத்தில் நின்னு…

பெண் : காதல் என்றும் படிப்பதில்ல…
கற்று தந்து தெரிவதில்ல…
வண்டு வந்து தேன உண்ண…
வாத்தியாரு தேவையில்ல…

ஆண் : மின்னல்லுக்கென்ன சேல…
அத விசிறி போடு கீழ…

பெண் : மாமனின் சொத்துக்கள பத்திரமா வைப்பது என் கடமை…
ஆண் : மன்மத சித்திரத்த மூடியிங்கு வச்சதுதான் கொடுமை…

பெண் : என்ன கண்ணால் கிள்ளுற கையால் அள்ளுற…
காயம் பண்ணுறியே…

ஆண் : போடு… வண்டியில மாமன் பொண்ணு…
ஓட்டுறவன் செல்லகண்ணு…
எங்க வீட்டு ராணி வர்றா…
எல்லாம் வந்து பாத்துக்குங்க…

—BGM—

ஆண் : வண்டியில சலங்க சத்தம்…
வாங்கிக்கடி உதட்டு முத்தம்…
அக்கம் பக்கம் இந்த சத்தம்…
கேக்காதம்மா எதுக்கு அச்சம்…

பெண் : வண்டியில கொடுத்த முத்தம்…
வாழ்கை எல்லாம் இனிக்கும் நித்தம்…
கட்டிக்கிற மாமன் சொன்னா…
என்னத்துக்கு எனக்கு அச்சம்…

ஆண் : உதட்ட வச்சு உன்ன இப்ப அளக்க போறேன் கண்ணே…
பெண் : சொன்னத கேட்டதுமே அம்மம்மா சொக்குது என்மனமே…

ஆண் : எண்ணிக்க நீ கணக்க வாங்கியத திருப்பி நீ கொடுக்க…
பெண் : நீ ஒண்ணா தந்தத பத்தா திருப்பி நிச்சயம் நான் தருவேன்…

ஆண் : வண்டியில மாமன் பொண்ணு…
ஓட்டுறவன் செல்லகண்ணு…
எங்க வீட்டு ராணி வர்றா…
எல்லாம் வந்து பாத்துக்குங்க…

பெண் : பொட்டி வண்டி கட்டிக்கிட்டு…
பொண்ணு மேல ஒட்டிக்கிட்டு…
ராணிக்கு ஏத்த ராசா…
எங்க மாமேன் வர்றார் பாத்துக்குங்க…

ஆண் : கட்டிக்கபோற பொண்ணு…
ஒட்டிக்கிட்டா தப்பில்ல செல்லக்கண்ணு…

பெண் : தப்புன்னு யாரு சொன்னா…
கன்னந்தொட்டு தாளத்த போடு நல்லா…

ஆண் : அட அப்படி போட்டுக்க…
ஆசைய பாத்துக்க… டோய்…

ஆண் : வண்டியில மாமன் பொண்ணு…
ஓட்டுறவன் செல்லகண்ணு…
எங்க வீட்டு ராணி வர்றா…
எல்லாம் வந்து பாத்துக்குங்க…


Notes : Vandiyile Song Lyrics in Tamil. This Song from Chellakannu (1995). Song Lyrics penned by Pulamaipithan. வண்டியில மாமன் பொண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading