வந்தேன் வந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகமல்ஹாசன், சுஜாதா மோகன் & நித்யஸ்ரீ மகாதேவன்தேவாபஞ்சதந்திரம்

Vandhen Vandhen Song Lyrics in Tamil


BGM

பெண் : வந்தேன் வந்தேன்…
மீண்டும் நானே வந்தேன்…
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்…

பெண் : எனது கனவு கனவை…
எடுத்து செல்ல வந்தேன்…
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே…

பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
யாரோடி வாயாடி…
கள்ளியே வில்லியே தள்ளிப்போடி…
ராமனின் மைதிலி நான்தாண்டி…
பொம்பள போக்கிரி ஓடிப்போடி…
உன் ஆசைக்கு ஆதிசேஷன் தேடுதோடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பந்தியில…
குழு : தாம் தை…
பெண் : பங்கு கேட்டா…
குழு : தக்க தை…
பெண் : விட்டு தருவேன்…

பெண் : என் முந்தியில…
குழு : தாம் தை…
பெண் : பங்கு கேட்டா…
குழு : தக்க தை…
பெண் : வெட்டி புடுவேன்…

பெண் : அடி கண்டவளும் வந்து கைய வைக்க…
அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல…

பெண் : வந்தேன் வந்தேன்…
மீண்டும் நானே வந்தேன்…

பெண் : எனது கனவு கனவை…
எடுத்து செல்ல வந்தேன்…
வந்தேன் வந்தேன்…
மீண்டும் நானே வந்தேன்…

குழு : ஜிமுக்கு ஜிக்கு…
ஜிக்கு ஜிமுக்கு ஜிக்கு…
ஜிமுக்கு ஜிக்கு…
ஜிக்கு ஜிமுக்கு ஜிக்கு…

குழு : ஜிமுக்கு ஜிக்கு…
ஜிக்கு ஜிமுக்கு ஜிக்கு…
ஜிமுக்கு ஜிக்கு…
ஜிக்கு ஜிமுக்கு ஜிக்கு…

BGM

பெண் : என்ன…
ஆண் : பேசாதே பேசாதே…
பெண் : அதை அங்க சொல்லுங்க…
ஆண் : பேசாதே பேசாதே…

ஆண் : கொஞ்சம் அழகாக ஏன்தான் பிறந்தேனோ…
போதும் நான் பட்ட பாடு…

ஆண் : வேங்கை ஒரு பக்கம்…
சிங்கம் மறு பக்கம்…
நடுவில் நான்தானே ஆடு…

பெண் : அட என் ஜீவன் போனாலும்…
உன் கற்பை நான் காப்பேன்…
சிரி கொஞ்சம் ஸ்ரீ ராமா…

பெண் : வந்தேன் வந்தேன்…
மீண்டும் நானே வந்தேன்…

பெண் : எனது கனவு கனவை…
எடுத்து செல்ல வந்தேன்…
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே…

பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
வாயேன்டி ஆடேன்டி…
முட்டிதான் பார்க்கலாம் வாரியாடி…
உன் முட்டிதான் பேர்ந்திடும் ஓடி போடி…

பெண் : நான் பச்ச கிளி…
குழு : தாம் தை…
பெண் : நீ வெட்டுக் கிளி…
குழு : தக்க தை…
பெண் : போட்டி என்னடி…

பெண் : உன்னை ஆட்டி வைப்பேன்…
பேயும் ஓட்டி வைப்பேன்…
எந்தன் ஸ்ரீ ராமன் மேல் ஆணை…

பெண் : வந்தேன் வந்தேன் மீண்டும்…
நானே வந்… ஆஅ…

BGM

பெண் : தீம் தனக்கா தனக்கா…
திகிருதனக்கா தரிகிட…
தீம் தனக்கா அடட…
தளுக்கா மினுக்கா தளுக்கா…

பெண் : தத்தித் தத்திதி தகரிடதோம்…
சகச நிச நிச ப…
தரிகிடதோம் தரிகிடதோம்…
சகச நிச நிச ப…
தரிகிடதோம் தரிகிடதோம்…

பெண் : எனக்கு எனக்கு நீ சரிசமா கம…
தத்திக் தரிகிட தோம் தத்தரிகிரிதோம்…

பெண் : ஏய் எனக்கு நீயா உனக்கு நானா…
ஒண்டிக்கு ஒண்டி பார்த்துகலாமா…

பெண் : வாயேன்டி ஜதி போடேன்டி…

BGM

பெண் : வந்தேன் வந்தேன்…
மீண்டும் நானே வந்தேன் ரெடியா…
பெண் : வாடி வா…
பெண் : வாயாடி எனக்கு சமமாடி…
பெண் : கம் ஆன்…

BGM

பெண் : வந்தேன் வந்தேன்…
மீண்டும் நானே வந்தேன்…


Notes : Vandhen Vandhen Song Lyrics in Tamil. This Song from Panchathanthiram (2002). Song Lyrics penned by Vairamuthu. வந்தேன் வந்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading