வளர்ந்த கலை மறந்துவிட்டாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி.பி.ஸ்ரீனிவாஸ் & பி.சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகாத்திருந்த கண்கள்

Valarnda Kalai Maranduvittal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வளர்ந்த கலை மறந்துவிட்டாள்…
கேளடா கண்ணா…
அவள் வடித்து வைத்த ஓவியத்தை…
பாரடா கண்ணா…

ஆண் : வளர்ந்த கலை மறந்துவிட்டாள்…
கேளடா கண்ணா…
அவள் வடித்து வைத்த ஓவியத்தை…
பாரடா கண்ணா…

பெண் : குடும்ப கலை போதுமென்று…
கூறடா கண்ணா…
அதில் கூட இந்த கலைகள் வேறு…
ஏனடா கண்ணா…

பெண் : குடும்ப கலை போதுமென்று…
கூறடா கண்ணா…
அதில் கூட இந்த கலைகள் வேறு…
ஏனடா கண்ணா…

ஆண் : வளர்ந்த கலை மறந்துவிட்டாள்…
கேளடா கண்ணா…
அவள் வடித்து வைத்த ஓவியத்தை…
பாரடா கண்ணா…

—BGM—

ஆண் : காதல் சொன்ன பெண்ணை இன்று…
காணுமே கண்ணா…
காதல் சொன்ன பெண்ணை இன்று…
காணுமே கண்ணா…

ஆண் : கட்டியவள் மாறிவிட்டாள்…
ஏனடா கண்ணா…
தாலி கட்டியவள் மாறிவிட்டாள்…
ஏனடா கண்ணா…

பெண் : காதலிதான் மனைவி என்று…
கூறடா கண்ணா…
அந்த காதலிதான் மனைவி என்று…
கூறடா கண்ணா…
அன்று கண்ணை மூடி கொண்டிருந்தான்…
ஏனடா கண்ணா…

பெண் : மனதில் அன்றே எழுதி வைத்தேன்…
தெரியுமா கண்ணா…
அதை மறுபடியும் எழுத சொன்னால்…
முடியுமா கண்ணா…

—BGM—

ஆண் : தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்…
கூறடா கண்ணா…
அவள் தேவை என்ன ஆசை என்ன…
கேளடா கண்ணா…

பெண் : நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல…
முடியுமா கண்ணா…
அதை நீ பிறந்த பின்பு கூற…
இயலுமா கண்ணா…

ஆண் : வளர்ந்த கலை மறந்துவிட்டாள்…
கேளடா கண்ணா…
அவள் வடித்து வைத்த ஓவியத்தை…
பாரடா கண்ணா…

—BGM—

ஆண் : இன்று வரை நடந்ததெல்லாம்…
போகட்டும் கண்ணா…
இன்று வரை நடந்ததெல்லாம்…
போகட்டும் கண்ணா…

ஆண் : இனி என்னிடத்தில் கோபமின்றி…
வாழச்சொல் கண்ணா…
இனி என்னிடத்தில் கோபமின்றி…
வாழச்சொல் கண்ணா…

பெண் : அவரில்லாமல் எனக்கு வேறு…
யாரடா கண்ணா…
அவரில்லாமல் எனக்கு வேறு…
யாரடா கண்ணா…
நான் அடைக்கலமாய் வந்தவள்தான்…
கூறடா கண்ணா…

—BGM—


Notes : Valarnda Kalai Maranduvittal Song Lyrics in Tamil. This Song from Kathiruntha Kangal (1962). Song Lyrics penned by Kannadasan. வளர்ந்த கலை மறந்துவிட்டாள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading