வடக்கா தெற்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிவினீத் ஸ்ரீனிவாசன்விஜய் ஆண்டனிஅவள் பெயர் தமிழரசி

Vadakka Thekka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

ஆண் : இறைதேடிப் போனப்பறவை நீ இன்னும்…
கூடுவந்து சேரலையே…
இறைதேடிப் போனப்பறவை நீ இன்னும்…
கூடுவந்து சேரலையே…
என் இருவிழிகள் கரையுதடி…
சொன்னாலும் கேட்கலையே…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

—BGM—

ஆண் : நீ மொகம் பார்க்கும் கண்ணாடியில…
உன் நெத்திப்பொட்டு இருக்கு…
நீ குளிச்ச இடத்துலத்தான்…
மஞ்சத்துண்டு கெடக்கு…

ஆண் : நீ விட்டத்துல சொருகி வச்ச…
கோழி இரெக்கை இருக்குதடி…
நீ சிக்கெடுத்துப் போட்ட முடி…
கால சுத்திக்கெடக்குதடி…

ஆண் : என்னை சுத்தி எல்லாமே…
உன்பேரத்தான் சொல்ல…
என்னை ஒத்தையில விட்டுப்புட்டா…
நான் எங்க செல்ல…
நான் எங்க செல்ல…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

—BGM—

ஆண் : நீ விரல் நீட்டி கொஞ்சம் பேசையில…
அடி வானவில்லும் உதிக்கும்…
நீ நடந்த தடத்தில்தான்…
சொர்க்கவாசல் திறக்கும்…

ஆண் : நீ அன்னம் என்று தெரியாம…
அம்பு கொண்டு எஞ்சிப்புட்டேன்…
இந்தப்பாவம் தீர்த்திடத்தான்…
எந்த ஆத்தில் குளிக்கப்போவேன்…

ஆண் : நான் விடும் கண்ணீருல…
அரக்கானி நெனைஞ்சிடுமே…
அதுல உழுது வெதைச்சாலும்…
ஒரு போகம் வெளைஞ்சிடுமே…
அதுல ஒரு போகம் வெளைஞ்சிடுமே…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

ஆண் : இறைதேடிப் போனப்பறவை நீ இன்னும்…
கூடுவந்து சேரலையே…
இறைதேடிப் போனப்பறவை நீ இன்னும்…
கூடுவந்து சேரலையே…
என் இருவிழிகள் கரையுதடி…
சொன்னாலும் கேட்கலையே…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…


Notes : Vadakka Thekka Song Lyrics in Tamil. This Song from Aval Peyar Tamilarasi (2010). Song Lyrics penned by Ekadesi. வடக்கா தெற்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading