வானம் இடி இடிக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிஇளையராஜாஉன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்

Vaanam Idi Idikka Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானம் இடி இடிக்க…
மத்தளங்கள் சத்தம் இட…
ராசாதி ராசா தொடுத்த மாலதான்…
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்…

ஆண் : வானம் இடி இடிக்க…
மத்தளங்கள் சத்தம் இட…
ராசாதி ராசா தொடுத்த மாலதான்…
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்…

ஆண் : நெனச்சது பலிச்சதம்மா…
எனக்கது கெடச்சதம்மா…
என்னம்மா சொல்லம்மா…
கண்ணம்மா கைய்யத் தொட்டு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வானம் இடி இடிக்க…
மத்தளங்கள் சத்தம் இட…
ராசாதி ராசா தொடுத்த மாலதான்…
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்…

BGM

பெண் : சின்னச் சின்ன ஆச…
என்னத் தொட்டுப் பேச…
கன்னி மனம் கூச…
அங்கு காதல் வாசம் வீச…
இது காமன் போட்ட பூச…

ஆண் : மொட்டு மல்லி மால…
கட்டி வச்ச வேள…
பட்டுக் கூரச் சேல…
தொட்டு கட்டிப் பாக்கும் சோல…
மேளம் கொட்டிப் பாடும் வேள…

பெண் : ஆளான அழகான கொடிதான் அய்யா…
அதில் பூத்த புதுப் பூவில் தேன்தான் அய்யா…

ஆண் : தேன் அள்ளி நான் உண்ண திரை ஏனம்மா…
திரளான சுகம் காட்டும் கரை நானம்மா…

பெண் : வெக்கமா சொர்க்கமா…
விட்டு விட்டுச் செல்லுமா…
பக்கமா வந்துதான் மொத்தமா பலன் தரும்…

பெண் : வானம் இடி இடிக்க…
மத்தளங்கள் சத்தம் இட…
ராசாதி ராசா தொடுத்த மாலதான்…
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்…

பெண் : நெனச்சது பலிச்சதைய்யா…
எனக்கது கெடச்சதைய்யா…
என்னம்மா சொல்லய்யா…
கண்ணம்மா கைய்யத் தொட்டு…

ஆண் : வானம் இடி இடிக்க…
மத்தளங்கள் சத்தம் இட…
ராசாதி ராசா தொடுத்த மாலதான்…
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்…

BGM

ஆண் : பொன்னுமணி பூட்டி…
பூ விலங்கு சூட்டி…
கன்னி வரும் நேரம்…
அப்ப தன்னால் தீரும் பாரம்…
அதன் பின்னால் போதை ஏறும்…

பெண் : கட்டிலுக்கு மேலே…
ரெட்டக் கிளி போலே…
ஒட்டி நின்னு பாடும்…
இளவட்டம் மோகம் தேடும்…
அதில் சொர்க்கம் நேரில் கூடும்…

ஆண் : வாழ்நாளில் நினைக்காத புது நாள் இது…
காணாத கலையாத கலைதான் இது…

பெண் : தேனோடு தினையாக இணையானது…
மானோடு மானாக துணையானது…

ஆண் : எண்ணம்தான் துள்ளுது…
என்னமோ சொல்லுது…
கண்ணமா வண்ணமா இன்பமா பொங்கி வரும்…

ஆண் : வானம் இடி இடிக்க…
மத்தளங்கள் சத்தம் இட…
ராசாதி ராசா தொடுத்த மாலதான்…
பெண் : இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்…

ஆண் : நெனச்சது பலிச்சதம்மா…
எனக்கது கெடச்சதம்மா…

பெண் : என்னம்மா சொல்லய்யா…
கண்ணம்மா கைய்யத் தொட்டு…

பெண் : வானம் இடி இடிக்க…
மத்தளங்கள் சத்தம் இட…
ராசாதி ராசா தொடுத்த மாலதான்…
ஆண் : இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்…


Notes : Vaanam Idi Idikka Song Lyrics in Tamil. This Song from Unnai Nenachen Pattu Padichen (1992). Song Lyrics penned by Vaali. வானம் இடி இடிக்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading