வா வா இதயமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிவிஜய் ஆனந்த்நான் அடிமை இல்லை

Vaa Vaa Idhayame Song Lyrics in Tamil


BGM

பெண் : வா வா இதயமே…
என் ஆகாயமே…
உன்னை நாளும் பிரியுமோ…
இப்பூ மேகமே…

பெண் : கடல் கூட வற்றி போகும்…
கங்கை ஆறும் பாதை மாறும்…
இந்த ராகம் என்றும் மாறுமோ…

பெண் : வா வா இதயமே…
என் ஆகாயமே…

BGM

ஆண் : தேவலோக பாரிஜாதம்…
மண்ணில் வீழ்தல் என்ன ஞாயம்…
எந்தன் பாதம் முள்ளில் போகும்…
மங்கை உந்தன் கால்கள் நோகும்…

ஆண் : வான வீதியில் நீயும் தாரகை…
நீரில் ஆடும் நான் காயும் தாமரை…
காதல் ஒன்றே ஜீவனென்றால்…
தியாகம் உந்தன் வாழ்க்கை என்றால்…
ஏழை வாசல் தேடி வா…

ஆண் : வா வா இதயமே…
என் ஆகாயமே…
உன்னை நாளும் வாழ்த்துமே…
இப்பூ மேகமே…

BGM

பெண் : வான வில்லும் வண்ணம் மாறும்…
வெள்ளி வேரும் சாய்ந்து போகும்…
திங்கள் கூட தேய்ந்து போகும்…
உண்மை காதல் என்றும் வாழும்…

பெண் : காற்று வீசினால் பூக்கள் சாயலாம்…
காதல் மாளிகை சாய்ந்து போகுமோ…
ராமன் பின்னே மங்கை சீதை…
எந்தன் வாழ்வோ உந்தன் பாதை…
காதல் மாலை சூட வா…

ஆண் : வா வா இதயமே…
என் ஆகாயமே…

பெண் : உன்னை நாளும் பிரியுமோ…
இப்பூ மேகமே…

ஆண் : கடல் கூட வற்றி போகும்…
பெண் : கங்கை ஆறும் பாதை மாறும்…
ஆண் : இந்த ராகம் என்றும் மாறுமோ…

ஆண் & பெண் : வா வா இதயமே…
என் ஆகாயமே…


Notes : Vaa Vaa Idhayame Song Lyrics in Tamil. This Song from Naan Adimai Illai (1986). Song Lyrics penned by Muthulingam. வா வா இதயமே பாடல் வரிகள்.


Scroll to Top