வா காத்திருக்க நேரம் இல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகாத்திருக்க நேரமில்லை

Vaa Kathirukka Neramillai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா காத்திருக்க நேரம் இல்லை… ஓ…
நீ பூத்திருக்கும் வாச முல்லை… ஓ…

ஆண் : விரக தாபம்… ம்ம்…
விளையும் காலம்… ம்ம்…
விலகி இருந்தால் வாடை வாட்டும் வா…

பெண் : வா காத்திருக்க நேரம் இல்லை… ஓ…
நான் பூத்திருக்கும் வாச முல்லை… ஓ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஏதோ ஓர் பாதரசம் ஏறும் உயிர் நாடியிலே… ஹா…
காந்தம் உருவாகுமடி கூடும் இளம் ஜோடியிலே…

பெண் : வளைக்கைகள் நீ சொன்னால் வளைக்காமல் போகாது…
வலிக்காது சீராட்டு சலிக்காது பூ மாது…

ஆண் : ஆசை ஊற்று போலே வெள்ளமாக பாயும் நேரமே…
ஆடை ஈரம் ஆக நீயும் நானும் நீந்த வேண்டுமே…

பெண் : வா காத்திருக்க நேரம் இல்லை… ஓ…
நான் பூத்திருக்கும் வாச முல்லை… ஓ…

பெண் : விரக தாபம்… ம்ம்…
விளையும் காலம்… ம்ம்…
விலகி இருந்தால் வாடை வாட்டும் வா…

ஆண் : வா காத்திருக்க நேரம் இல்லை… ஓ…

BGM

பெண் : மாலை மணி ஐந்தடித்தால் மான்தான் உனைத்தேடி வரும்…
காவல் ஒன்று போட்டு வைத்தால் கால்கள் அதைத்தாண்டி வரும்…

ஆண் : இடை சேர்ந்த பின்னாலே இடைவேளை கூடாது…
இணை சேர்ந்த ஜீவன்கள் தனித்தென்றும் வாழாது…

பெண் : அன்பே நீல வண்ணம் வானை என்றும் நீங்கிடாது…
மீட்டும் விரல் இல்லாது வாழ்வதேது வீணையானது…

ஆண் : வா காத்திருக்க நேரம் இல்லை… ஓ…
நீ பூத்திருக்கும் வாச முல்லை… ஓ…

பெண் : விரக தாபம்… ம்ம்…
விளையும் காலம்… ம்ம்…
விலகி இருந்தால் வாடை வாட்டும் வா…

ஆண் : வா காத்திருக்க நேரம் இல்லை… ஓ…
பெண் : நீ பூத்திருக்கும் வாச முல்லை… ஓ…


Notes : Vaa Kathirukka Neramillai Song Lyrics in Tamil. This Song from Kathirukka Neramillai (1993). Song Lyrics penned by Vaali. வா காத்திருக்க நேரம் இல்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading