உள்ளமே உனக்குதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & அனுராதா ஸ்ரீராம்சௌந்தர்யன்கோபுர தீபம்

Ullame Unakkuthan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்…
உன்னையும் என்னையும் பிரிச்சா உலகமில்லையே…
தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே…

ஆண் : வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்…
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்…

பெண் : உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்…
உள்ளமே உனக்குத்தான் உசுரே உனக்குதான்…

—BGM—

ஆண் : பார்த்ததும் இரண்டு விழியும் இமைக்க மறந்துப் போச்சு…

—BGM—

ஆண் : குரல கேட்டதும் கூவும் பாட்டு குயிலும் மறந்து போச்சு…

—BGM—

பெண் : தொட்டதும் செவப்பு சேலை இடுப்ப மறந்துப் போச்சு…
இழுத்து சேர்த்ததும் பேச வந்ததது பாதி மறந்துப் போச்சு…

ஆண் : சுந்தரி உன்னையும் என்னையும் பிரிச்ச காலம் போச்சு…
பெண் : என் கிராமமே உன்னை கண்டதும் பழக்கம் வழக்கலாச்சு…

ஆண் : உறவு தடுத்த போதும் உயிர் கலந்தாச்சு…
பெண் : உனக்கு சேர்த்துதானே நான் விடும் மூச்சு…

ஆண் : வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்…
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்…

பெண் : உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்…
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்…

—BGM—

பெண் : மாமனே முயற்சி இருக்கு…
உன்னையும் என்னையும் பிரிக்க…

—BGM—

பெண் : இனி கேட்கிறேன் குளத்து தண்ணிய…
குடத்தில் எப்படி அடைக்க…

—BGM—

ஆண் : காதலி எழுதியிருக்கும் மனசும் மனசும் கலக்க…
அடியே முடியுமா பல்லு எடுத்த காத்து வந்து அழிக்க…

பெண் : கண்ணணே உன்னை காண உசிரு கிடந்து துடிக்க…
ஆண் : அழகு ராணியே இதய துடிப்ப எந்த தாவணி மறைக்க…

பெண் : மனசு திறந்து பேச மதிச்சு பறக்க…
ஆண் : மவுசு கூடிவந்து கண்ணுபட படக்க…

ஆண் : வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்…
இல்லையீல் மண்ணோடு போய் நான் சேருவேன்…

பெண் : உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்…
உன்னையும் என்னையும் பிரிச்சா உலகமில்லையே…
தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே…

பெண் : வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்…
ஆண் : இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்…

பெண் : உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்…
ஆண் : உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே…
பெண் : தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே…


Notes : Ullame Unakkuthan Song Lyrics in Tamil. This Song from Gopura Deepam (1997). Song Lyrics penned by Vairamuthu. உள்ளமே உனக்குதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading