உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஜி.வி. பிரகாஷ் குமார் & ஹரிணிஜெஸ்ஸி கிப்ட்சொல்லிவிடவா

Uyire Uyire Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உயிரே உயிரே…
சில கோடி கேள்வி என்னில்…
உயிரே உயிரே…
பதில் யாவும் உன்னில் உன்னில்…

ஆண் : ஒரு காடு எரிகிற போது…
சில பூக்கள் திறப்பது ஏனோ…

ஆண் : உயிரே உயிரே…
சில கோடி கேள்வி என்னில்…
உயிரே உயிரே…
பதில் யாவும் யாவும் உன்னில்…

—BGM—

பெண் : கண்ணீரின் துளி விடுதலை கேட்கிறதோ…
தரவா உயிரே…
யார் நெஞ்சின் வலி என் நெஞ்சில் ஏரிடுதோ…
பெறவா உயிரே…

ஆண் : தேசமே ஸ்வாசமாய்…
தேகமே தியாகமாய்…
இந்த தெய்வங்களின் பாதங்களை…
நீராட்டதான் கண்ணீரோ…

பெண் : உயிரே உயிரே…
சில கோடி கேள்வி என்னில்…
உயிரே உயிரே…
பதில் யாவும் யாவும் உன்னில்…

—BGM—

பெண் : காற்றெங்கும் புகை என் மூச்சில் நறுமணமா…
முறையா உயிரே…
காயங்கள் என்னில் ஆறாமல் சுகம் தருதே…
பிழையா உயிரே…

ஆண் : வீரனாய் சாகவா…
கோழையாய் வாழவா…
அதன் ரெண்டுக்கும்தான்…
மத்தியிலே ஏன் என்னை வைத்தாயோ…

பெண் : உயிரே உயிரே…
சில கோடி கேள்வி என்னில்…
உயிரே உயிரே…
பதில் யாவும் யாவும் உன்னில்…

பெண் : இந்த போரும் முடிகிறதென்று…
என் நெஞ்சம் கனப்பது ஏனோ…

—BGM—


Notes : Uyire Uyire Song Lyrics in Tamil. This Song from Sollividava (2018). Song Lyrics penned by Madhan Karky. உயிரே உயிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading