உயிர் கொண்ட ரோஜாவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபரத்வாஜ்பரத்வாஜ்ரோஜா கூட்டம்

Uyir Konda Rojaave Song Lyrics in Tamil


ஆண் : ம்ம்ம்… உயிர் கொண்ட ரோஜாவே…
குழு : ரோஜாவே ரோஜாவே…
ஆண் : உயிர் வாங்கும் ரோஜாவே…
குழு : ரோஜாவே ரோஜாவே…

ஆண் : உயிர் கொண்ட ரோஜாவே…
உயிர் வாங்கும் ரோஜாவே…
கிள்ளி போகவே வந்தேன்…

ஆண் : பக்கம் வந்த ரோஜாபூ…
பக்தன் என்று சொல்லியதால்…
பூஜை அறையில் வைத்தேன்…

ஆண் : அன்று காதலனா இன்று காவலனா…
விதி சொன்ன கதை இதுதானா நெஞ்சமே…

குழு : ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம்…
அருகில் ரோஜா கூட்டம்…
நடுவில் முள்ளின் தோட்டம்…

—BGM—

ஆண் : ரோஜா கூட்டம்… ரோஜா கூட்டம்…

ஆண் : தூரத்தில் இருக்கையில் அண்மையில் இருந்தாய்…
அடிவான் நிலவாக…
அண்மையில் வந்ததும் தூரத்தில் தொலைந்தாய்…
கரைமேல் அலையாக…

ஆண் : கள்ளம் இல்லாமல் கை தொடும்பொழுது…
உள்ளத்தில் நில நடுக்கம்…

ஆண் : ஒரு சொர்க்கத்துக்குள் சிறு நரகமடி…
என் முகமேதான் முகம் மூடி பாரடி…

குழு : ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம்…
அருகில் ரோஜா கூட்டம்…
நடுவில் முள்ளின் தோட்டம்…

—BGM—

ஆண் : கண்களில் இருந்து உறக்கத்தை முறித்து…
இரவில் எரித்துவிட்டேன்…
நெஞ்சத்தில் இருந்து காதலை உறித்து…
பாதியில் நிறுத்திவிட்டேன்…

ஆண் : ஒரு சில சமயம் உயிர் விட நினைத்தேன்…
உனக்கே உயிர் சுமந்தேன்…

ஆண் : அடி சினேகிதியே முன் காதலியே…
என் நெஞ்சோடு என் காதல் வேகட்டும்…

{ குழு : ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம்…
அருகில் ரோஜா கூட்டம்…
நடுவில் முள்ளின் தோட்டம்… } * (2)

ஆண் : ரோஜா கூட்டம்… ரோஜா கூட்டம்…

—BGM—


Notes : Uyir Konda Rojaave Song Lyrics in Tamil. This Song from Roja Kootam (2002). Song Lyrics penned by Vairamuthu. உயிர் கொண்ட ரோஜாவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading