உதிரா உதிரா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஸ்ரேயா கோஷல், மரியா ரோய் வின்சென்ட் & ஸ்ரீகாந்த் ஹரிஹரன்டி. இமான்பொன் மாணிக்கவேல்

Uthira Uthira Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆஆ… உதிரா உதிரா வினவல் கோடி என்னில்…
உதிரா உதிரா விடைகள் யாவும் உன்னில்…
எனை உரசிடும் மீசை கொண்டு எறும்பியல் படித்தேன்…
எனை மயக்கிடும் சொற்கள் கொண்டு மதுவியல் படித்தேன்…
நா ரெண்டும் பின்னிக் கொள்ள வேதியல் படித்திடுவேன்…

—BGM—

ஆண் : ஆஆ… உதிரா உதிரா வினவல் ஏனோ கண்ணில்…
உதிரா உதிரா விடைகள் யாவும் உன்னில்…
கன்னகரு கரு கூந்தல் போதும் வனவியல் விளக்க…
சின்னஞ்சிறு சிறு கண்கள் போதும் வானியல் விளக்க…
உன் நெஞ்சின் ஆழம் போதும் கடலியல் நீ படிக்க…

—BGM—

பெண் : ஒரு பரிசைக்கென இவள் தவம் கிடக்க…
என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு நீயும் கலைக்க…
அங்கே பானிபட்டு போர்…
இங்கு மேனிபட்டு போர்…
முத்தம் இட்டு இட்டு இட்டு எனை நீயும் கவிழ்க்க…

—BGM—

ஆண் : தேவைகள் ஆயிரம் தேர்வுகென்ன தீவிரம்…
நடந்து முடிந்த போர்கள் எல்லாம் நமக்கு ஏனடி…
விடிய விடிய போர்கள் செய்தே…
சரிதம் எழுதடி…

பெண் : நிதிநிலை நான் கேட்க…
என் ஆடை நீ நீக்க…
பண மதிப்பின் ஏற்றம்…
இறக்கங்கள் நீ காட்ட…

ஆண் : அரசியலை அறிந்திடவே…
உரசியல் அறிந்திடு மானே…

பெண் : ஒரு இரவில் மதிப்பிழந்தே…
நம் மொத்த முத்தங்கள் ரத்தானதாலே…

பெண் : உதிரா உதிரா வினவல் கோடி என்னில்…

ஆண் : ஆஆ… உதிரா உதிரா விடைகள் யாவும் உன்னில்…

பெண் : ஆஆ… உனை உன்னை உன்னை தூரம் தள்ளி உளவியல் படிப்பேன்…

ஆண் : ஹ்ம்ம்… இடை இடைவெளி நீக்கதானே களவியல் படித்தேன்…

ஆண் & பெண் : காலத்தின் காலை கட்டி களவியல் முடித்திடுவேன்…

—BGM—

பெண் : ஆஆ… உதிரா உதிரா…

ஆண் : ஹ்ம் ம்ஹ்ம் ஆஅ…

பெண் : ஹாஆஅ… உதிரா உதிரா…

ஆண் : ஹ்ம் ம்ஹ்ம்… ஆஆ…


Notes : Uthira Uthira Song Lyrics in Tamil. This Song from Pon Manickavel (2021). Song Lyrics penned by Madhan Karky. உதிரா உதிரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading