உசுருக்குள் உன் பேர

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்அனுராதா ஸ்ரீராம் & கேசவ் வினோத்எம்.எஸ்.ஸ்ரீகாந்த்எட்டுத்திக்கும் பற

Ushrukkul Un Pera Song Lyrics in Tamil


BGM

பெண் : உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்…
உன்மேல மட்டும்தான் ஆச வச்சேன்…
என்கிட்டே என்ன நான் பேச வச்சேன்…

ஆண் : உன் பார்வை பட்ட நேரம்…
நான் வேர் அருந்த போனேன்…
உன் வேர்வ பட்டதால…
ஊர் அருந்த போனேனே…

பெண் : உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்… ஹோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நீ எனக்கு போதும்…
நான் நெறஞ்சு வழியுறேன்…
பூமி பந்த போல…
நான் தான சொழலுறேன்…

ஆண் : நத்த கூட்ட போல…
நான் உனக்குள் அடங்குறேன்…
சத்தமின்றி உன்ன…
நான் முழுசா முழுங்குறேன்…

பெண் : குலசாமி போலத்தான்…
என் முன்னால நிக்குற…
மரங்கொத்தி போலத்தான்…
என்ன நீ கொத்துற…

ஆண் : ஒரு கோழி குஞ்ச போல…
என்ன பொத்தி வைக்குற…
இந்த பாவி நெஞ்சுக்குள்ள…
சிறுவாட சேக்குற…

பெண் : வெள்ளந்தி பாசத்த…
வெல பேச யாருமில்லை…

பெண் : உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்…

BGM

பெண் : உள்ளங்கை ரேகை…
உன் பேர சொல்லுதே…
உள்ளுக்குள்ள வெக்கம்…
என்னை குத்தி கொல்லுதே…

ஆண் : உள்ளங்காலு நிழலா…
என்ன ஒட்ட வச்சுட்ட…
உசுர மட்டும் பிச்சு…
நீ வெளிய நட்டுட்ட…

பெண் : ஆகாயம் போல நீ…
எங்கயும் நிக்குற…
அப்பப்போ என்ன நீ…
பூ பூக்க வைக்குற…

ஆண் : அடி நீயும் நானும் வாழ…
ஒரு கோவில் கட்டுவேன்…
உன்ன யாரு தீண்டினாலும்…
நான் நின்னு வெட்டுவேன்…

பெண் : என் சாமி நீதான்டா…
உன்னவிட்டு போகமாட்டேன்…

ஆண் : உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்…

பெண் : உன்மேல மட்டும்தான் ஆச வச்சேன்…
என்கிட்டே என்ன நான் பேச வெச்சேன்…

ஆண் : உன் பார்வை பட்ட நேரம்…
நான் வேர் அருந்த போனேன்…
உன் வேர்வ பட்டதால…
ஊர் அருந்த போனேனே…

பெண் : உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்…


Notes : Ushrukkul Un Pera Song Lyrics in Tamil. This Song from Ettuthikkum Para (2019). Song Lyrics penned by Snehan. உசுருக்குள் உன் பேர பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading