உன்னாலே உன்னாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிதமன் எஸ் & ரீட்டாதமன் எஸ்ஒஸ்தி

Unnale Unnale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யே… உன்னாலே உன்னாலே…
சுத்துதடி பூமி பந்து தன்னாலே…
யே… கண்ணாலே கண்ணாலே…
ஒட்டுதடி வானவில்லு என்மேல…

ஆண் : தேவதைய காணவில்ல ஏங்கினேன்…
குழு : அப்போ…
ஆண் : உன் வலியில் தீருதே ஏக்கமும்…
குழு : இப்போ…

ஆண் : பூமழையே வானமே தூறுமே…
குழு : அப்போ…
ஆண் : உன் நினைவு தூரலா சேருதே…
குழு : இப்போ…

ஆண் : உன்னாலே உன்னாலே…
சுத்துதடி பூமி பந்து தன்னாலே…

—BGM—

குழு : இவன் மனசுதான் பெருசுதான்…
உனக்கு இவன் இடமுந்தான் கொடுக்குறான்…
உன் நெனப்புதான் கனவுதான்…
அவன நெனச்சுதான் உருகுதான்…

—BGM—

குழு : ஓ… அய்யோ அய்யோ தெரியுமா…
கனவிலே கலைகிற வேஷமே…
இங்கே சென்று முடியுமா…
தலும்பியே வழிகிற நேசமே…

ஆண் : ஹே… என்ன நீயும் பாக்கலனா…
அன்னம் இல்ல ஆகாரம் இல்ல…
உன்ன பத்தி பேசலேனா…
நண்பன் இல்ல நான் கூட இல்லவே இல்ல…

ஆண் : நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன்…
குழு : அப்போ…
ஆண் : நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன்…
குழு : இப்போ…

ஆண் : மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன்…
குழு : அப்போ…
ஆண் : காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன்…
கத்துறேன் இப்போ…

ஆண் : உன்னாலே… உன்னாலே…

—BGM—

குழு : ஓ… இல்லை இல்லை இதயமே…
தொலைந்திடும் தினம் உன்னை காணவே…
இங்கே இங்கே எதுவுமே…
தெரிந்திடும் கடவுளை போலவே…

ஆண் : யே… என்ன சொல்ல ஏது சொல்ல…
எல்லாமுமே நீயாகி நின்னேன்…
கத்தியில காயமில்ல…
ஆனாலும் நீ சொல்லாமல்…
கொல்லாமல் கொல்ல…

ஆண் : தேவதைய காணவில்ல ஏங்கினேன்…
குழு : அப்போ…
ஆண் : உன் வலியில் தீருதே ஏக்கமும்…
குழு : இப்போ…

ஆண் : பூமழையே வானமே தூறுமே…
குழு : அப்போ…
ஆண் : உன் நினைவு தூரலா சேருதே…
குழு : இப்போ…

ஆண் : நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன்…
குழு : அப்போ…
ஆண் : நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன்…
குழு : இப்போ…

ஆண் : மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன்…
குழு : அப்போ…
ஆண் : காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன்
கத்துறேன் இப்போ…

ஆண் : உன்னாலே உன்னாலே…
குழு : சுத்துதடி பூமி பந்து தன்னாலே…

ஆண் : ஓ… கண்ணாலே கண்ணாலே…
குழு : ஒட்டுதடி வானவில்லு என்மேல…

—BGM—


Notes : Unnale Unnale Song Lyrics in Tamil. This Song from Osthe (2011). Song Lyrics penned by Yugabharathi. உன்னாலே உன்னாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading