உன்னை சரணடைந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தேன்மொழிபிரசன்னா & கல்யாணிசபேஷ் & முரளிதவமாய் தவமிருந்து

Unnai Charanadainthen Song Lyrics in Tamil


பெண் : உன்னை சரணடைந்தேன்…
உன்னுள்ளே நான் பிறந்தேன்…
என்னில் உரைந்திருந்தேன்…
உன்னுள்ளே நான் கரைந்தேன்…

பெண் : கண்கள் இமையைவிட்டு உன்னையே நம்பி நிற்க…
சுவாசம் காற்றைவிட்டு உன்னையே தேடி செல்ல…

பெண் : தாயாக மாறி போனயே…
வேராக தாங்கி நின்றாயே…

பெண் : அயராது ஓடும் நெஞ்சின் இசையாக நீ இருக்க…
கண்ணீர் ஊறும் ஆழத்தில…
காலமெல்லாம் உப்பை போலே…
உந்தன் உள்ளே நான் இருப்பேனே…

BGM

ஆண் : தினம்தோறும் சாமிகிட்ட தீராத ஆயுள் கேட்டேன்…
நீ பார்க்கும் பார்வை போல பூவெல்லாம் பூக்க கேட்டேன்…
நீ நடக்கும் நிலத்தினிலும் நிம்மதி வளர்த்திடுவேன்…
நீ அருந்தும் நீரினிலும் தாய்மையை தந்திடுவேன்…
உன் உலகத்தின் மீது நான் மழை ஆகுவேன்…
உன் விருப்பங்கள் மீது நான் நதி ஆகுவேன்…

ஆண் : உன்னை சரணடைந்தேன்…
உன்னுள்ளே நான் பிறந்தேன்…
என்னில் உரைந்திருந்தேன்…
உன்னுள்ளே நான் கரைந்தேன்…

ஆண் : காதல் என்ற சொல்லில் காதலே இல்லை என்பேன்…
வாழும் வாழ்கை இதில் காதலாய் வாழ்வோம் என்பேன்…

ஆண் : சொந்தங்கள் யாவும் ஆனாயே…
சோகங்கள் ஆற்றிவிட்டாயே…

ஆண் : அடைக்காக்கும் தாய்குருவி சிறகாகி நீ அணைக்க…
முட்டை கூட்டின் ஓடு உடைத்து…
முட்டிமோதும் குஞ்சை போல…
தினமும் புதிதாய் நான் பிறப்பேனே…


Notes : Unnai Charanadainthen Song Lyrics in Tamil. This Song from Thavamai Thavamirundhu (2005). Song Lyrics penned by Thenmozhi. உன்னை சரணடைந்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading