வினோதமானவளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாலவ்லி

Vinodhamanavale Song Lyrics in Tamil


பெண் : சம் சம் சம்… சம் சம் சம்… சம் சம் சம் சம்…
சம் சம் சம்… சம் சம் சம்… சம் சம் சம் சம்…

ஆண் : வினோதமானவளே… வினோதமானவளே…

பெண் : சம் சம் சம்… சம் சம் சம்… சம் சம் சம் சம்…
சம் சம் சம்… சம் சம் சம்… சம் சம் சம் சம்…

ஆண் : வினோதமானவளே என் வினோதமானவளே…
நான் கவிதை சொன்னேன் அதை உளறல் என்கிறாய்…
உளருவதை நீ கவிதை என்கிறாய்…
வினோதமானவளே வினோதமானவளே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வினோதமானவனே என் வினோதமானவனே…
நீ நள்ளிரவில் தொலைபேசி செய்கிறாய்…
குட்மானிங் சொல்லி நீயும் சிரிக்கிறாய்…
வினோதமானவனே என் வினோதமானவனே…

ஆண் : வினோதமானவளே என் வினோதமானவளே…

BGM

பெண் : என்னுடைய பிறந்த நாளை…
ஊருக்கே நீ சொல்லுகிறாய்…
அன்றைக்கு விடுமுறைவிடவே…
அரசாங்கத்தை கெஞ்சுகிறாய்…
வினோதமானவனே…

ஆண் : ஒற்றை ஜடை போட்டு வந்து…
கூந்தல் கலைத்து கொள்ளுகிறாய்…
அதை மீண்டும் ரெட்டை ஜடையாய்…
என்னை பிண்ண சொல்லுகிறாய்…
வினோதமானவளே…

பெண் : நீ ஒரு நாள் என்னை கிராமத்து உடையில்…
வர சொல்லி பார்க்கிறாய்…
நீ மறு நாள் என்னை மேற்கத்து உடையில்…
வர சொல்லி ரசிக்கிறாய்…
என் வினோதமானவனே…

ஆண் : வெட்கம் வந்தால் என் நகத்தை…
நீயும் கடிப்பாய் அன்பே அன்பே…
என் வினோதமானவளே…
என் வினோதமானவளே…

பெண் : வினோதமானவனே என் வினோதமானவனே…

BGM

பெண் : அதிகாலை ஐந்து மணிக்கு…
நீயும் சென்று குளித்திடனும்…
மறுபடியும் ஏழு மணிக்கு…
என்னுடன் சேர்ந்தும் குளித்திடனும்…

பெண் : வினோதமானவனே…

பெண் : உடை மாற்றும் அறையில் நீயும்…
அனுமதி இன்றி வந்திடனும்…
கதவை நான் சாத்தி விட்டால்…
திறக்க சொல்லி கெஞ்சிடனும்…

ஆண் : வினோதமானவளே…

ஆண் : உன் சேலை தலைப்பை கூடாரம் போல…
எந்தன் முகம் மூடுகிறாய்…
உன் கண் மையை எடுத்து என் முகம் முழுதும்…
பூசி விட்டு சிரிக்கிறாய்…
என் வினோதமானவளே…

பெண் : ஒற்றை முத்தம் நானும் கேட்டால்…
பத்து கொடுப்பாய் ஆஹா… ஆஹா…

ஆண் : என் வினோதமானவளே…
என் வினோதமானவளே…

பெண் : வினோதமானவனே என் வினோதமானவனே…

ஆண் : உன்னை வர சொன்னால் வர மாட்டேன் என்கிறாய்…
எனக்கும் முன்னே அங்கு வந்து சேர்கிறாய்…
வினோதமானவளே என் வினோதமானவளே…

ஆண் : வினோதமானவனே என் வினோதமானவனே…


Notes : Vinodhamanavale Song Lyrics in Tamil. This Song from Lovely (2001). Song Lyrics penned by Pa. Vijay. வினோதமானவளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading