உனக்கென்ன மேலே நின்றாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ்.விஸ்வநாதன்சிம்லா ஸ்பெஷல்

Unakkenna Mele Nindrai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒன் டூ த்ரீ ஃபோர்…

ஆண் : தகதினதக ததும் தோம்…
தகதினதக ததும் தோம்…
தகதினதக ததும் தோம்…
தகதினதக ததும் தோம்த தோம்த தோம்த தகதின…
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின…
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்…

ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா…

—BGM—

ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா…
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா…

ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா…
தாய் மடியில் பிறந்தோம்…
தமிழ் மடியில் வளர்ந்தோம்…
நடிகரென மலர்ந்தோம்…
நாடகத்தில் கலந்தோம்…
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின…
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின…
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்…

—BGM—

ஆண் : ஆடாத மேடை இல்லை…
போடாத வேஷம் இல்லை…
ஆடாத மேடை இல்லை…
போடாத வேஷம் இல்லை…
சிந்தாத கண்ணீர் இல்லை…
சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை…

ஆண் : கால் கொண்டு ஆடும் பிள்ளை…
நூல் கொண்டு ஆடும் பொம்மை…
கால் கொண்டு ஆடும் பிள்ளை…
நூல் கொண்டு ஆடும் பொம்மை…
உன் கையில் அந்த நூலா…
நீ சொல்லு நந்தலாலா…

—BGM—

ஆண் : யாராரோ நண்பன் என்று…
ஏமாந்த நெஞ்சம் உண்டு…
யாராரோ நண்பன் என்று…
ஏமாந்த நெஞ்சம் உண்டு…
பூவென்று முள்ளைக் கண்டு…
புரியாமல் நின்றேன் இன்று…

ஆண் : பால் போலக் கள்ளும் உண்டு…
நிறத்தாலே ரெண்டும் ஒன்று…
பால் போலக் கள்ளும் உண்டு…
நிறத்தாலே ரெண்டும் ஒன்று…
நானென்ன கள்ளா பாலா…
நீ சொல்லு நந்தலாலா…

ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா…
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா…

ஆண் : தகதினதக ததும் தோம்…
தகதினதக ததும் தோம்…
தகதினதக ததும் தோம்…
தகதினதக ததும் தோம்த தோம்த தோம்த தகதின…
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின…
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்…

ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா…


Notes : Unakkenna Mele Nindrai Song Lyrics in Tamil. This Song from Simla Special (1982). Song Lyrics penned by Vaali. உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading