உன்னை நினைத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.எஸ். சித்ரா & சுஜாதா மோகன்தேவாநினைத்தேன் வந்தாய்

Unai Ninaithu Naan Enai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆஆஆ… உன்னை நினைத்து நான் என்னை மறப்பது…
அதுதான் அன்பே காதல் காதல்…
குழு : காதல் காதல்…

ஆண் : ஆஆஆ… உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது…
அதுதான் அன்பே காதல் காதல்…
குழு : காதல் காதல்…

பெண் : இந்த வாா்த்தைக்கு ஒருவித அா்த்தம் இல்லாதது காதல்…
ஆண் : இரு பாா்வைகள் மௌனத்தில் பேசுகின்ற மொழி காதல்…

பெண் : இங்கு கீழ்த்திசை சூாியன் மேல் திசை தோன்றினும்…
பாதை மாறிப் போகாது…
குழு : காதல் காதல்… காதல் காதல்…

ஆண் : ஆஆஆ… உன்னை நினைத்து நான் என்னை மறப்பது…
அதுதான் அன்பே…
குழு : காதல் காதல்… காதல் காதல்…

—BGM—

பெண் : அன்றாடம் நூறுவகை பூப்பூக்கும்…
ஆனாலும் காயாகும் சில பூக்கள்தான்…

ஆண் : எல்லோா்க்கும் காதல் வரும் என்றாலும்…
கல்யாண வைபோகம் சில போ்க்குதான்…

பெண் : காதலன் காதலி தோற்பதுண்டு…
காதல்கள் எப்போதும் தோற்பதில்லை…

ஆண் : ஊா்மனம் ஒருவரை ஏற்பதுண்டு…
இன்னொரு உறவினை ஏற்பதில்லை…

பெண் : நிறம் மாறிப் போகாமல்…
சுரம் மாறிப் போகாமல்…
உயிா் பாடும் ஒரு பாடல்தான்…
குழு : காதல் காதல்… காதல் காதல்…

ஆண் : ஆஆஆ… உன்னை நினைத்து நான் என்னை மறப்பது…
அதுதான் அன்பே…
குழு : காதல் காதல்… காதல் காதல்…

—BGM—

ஆண் : பூவிழியில் ஏற்றி வைத்த தீபம் இது…
புயல் காற்று அடித்தாலும் அணையாதது…

பெண் : புன்னகையில் போட்டு வைத்த கோலம் இது…
மழை மேகம் பொழிந்தாலும் அழியாதது…

ஆண் : நாயகன் ஆடிடும் நாடகம்தான்…
யாருக்கு யாா் என்று எழுதி வைத்தாா்…

பெண் : நடக்கட்டும் திருமணம் நல்ல படி…
இங்கொரு பெண் மனம் வாழ்த்தும் படி…

ஆண் : ஒரு ஜென்மம் போனாலும்…
பெண் : ஒரு ஜென்மம் போனாலும்…
மறு ஜென்மம் ஆனாலும்…

—BGM—

பெண் : ஒரு ஜென்மம் போனாலும்…
மறு ஜென்மம் ஆனாலும்…
தொடா்கின்ற கதைதான் அம்மா…
குழு : காதல் காதல்… காதல் காதல்…

பெண் : ஆஆஆ… உன்னை நினைத்து நான் என்னை மறப்பது…
அதுதான் அன்பே…
குழு : காதல் காதல்… காதல் காதல்…

ஆண் & பெண் : ஆஆஆ… உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது…
அதுதான் அன்பே…
குழு : காதல் காதல்… காதல் காதல்…


Notes : Unai Ninaithu Naan Enai Song Lyrics in Tamil. This Song from Ninaithen Vandhai (1998). Song Lyrics penned by Vaali. உன்னை நினைத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading