உன் பார்வையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கார்த்திக் & சுமங்கலிதேவி ஸ்ரீ பிரசாத்உனக்கும் எனக்கும்

Un Paarvaiyil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹ்ம்ம்… உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்…
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்…
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்…

ஆண் : ஒரு நியாபக அலை என வந்து…
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே…
என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்…

ஆண் : பெண்ணாக இருந்தவள் உன்னை…
நான் இன்று காதல் செய்தேன்…
உன்னோட அறிமுகத்தாலே…
நான் உன்னில் மறைமுகம் ஆனேன்…
நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே…

ஆண் : ல ல லைல லைலை லே…
ல ல லைலை லைலை லே…
ல லை லை ல லை லை லே லைலலே…

—BGM—

ஆண் : ஹேய்… உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்…
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்…
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்…

—BGM—

ஆண் : ஹான்… எது இதுவோ எது இதுவோ…
உன் மௌனம் சொல்கின்ற எழுத்தில்லா ஓசைகள்…
என்னென்று நான் சொல்லுவேன்…

பெண் : இது அதுவோ… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
இது அதுவோ… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
சொல்லாத சொல்லுக்கு இல்லாத வார்த்தைக்கு…
ஏதேதோ அர்த்தங்களே…

ஆண் : பெண் தோழன் நான்…
ஆண் தோழி நீ…
நட்புக்குள் நம் காதல் வாழும்…

பெண் : ஆண் ஆசை நான்…
பெண் ஆசை நீ…
ஆசைகள் பேராசைதான்…

ஆண் : ல ல லைல லைலை லே…
ல ல லைலை லைலை லே…
ல லை லை ல லை லை லே லைலலே…

—BGM—

ஆண் : உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்…
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்…
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்…

—BGM—

பெண் : உனதருகே இருப்பதனால்…
இரவுக்கு தெரியாத பகலுக்கு புரியாத…
பொழுதொன்றை நீ காட்டினாய்…

ஆண் : இதயத்தில் நீ இருப்பதனால்…
நான் தூங்கும் நேரத்தில் என்னுள்ளே தூங்காமல்…
நெஞ்சுக்குள் வாயாடினாய்…

பெண் : கண்ணாடி நீ கடிகாரம் நான்…
உன்னுள்ளே ஓடோடி வாழ்வேன்…

ஆண் : காதல் என்னும் கடுதாசி நீ…
என்றென்றும் அன்புடன் நான்…

ஆண் : ல ல லைல லைலை லே…
ல ல லைலை லைலை லே…
ல லை லை ல லை லை லே லைலலே…

ஆண் : ஹேய்… உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்…
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்…
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்…

பெண் : ஒரு நியாபக அலை என வந்து…
உன் நெஞ்சினை நனைத்தவள் நானே…
உன் வாலிப திமிரினை நானும் மயங்கினேன்…

ஆண் : பெண்ணாக இருந்தவள் உன்னை…
நான் இன்று காதல் செய்தேன்…

பெண் : உன்னோட அறிமுகத்தாலே…
நான் உன்னில் மறைமுகம் ஆனேன்…

ஆண் : நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே…

ஆண் : ல ல லைல லைலை லே…
ல ல லைலை லைலை லே…
ல லை லை ல லை லை லே லைலலே…


Notes : Un Paarvaiyil Song Lyrics in Tamil. This Song from Unakkum Enakkum (2006). Song Lyrics penned by Kabilan. உன் பார்வையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading