| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கபிலன் | பிரதீப் குமார் & சைந்தவி | ரஞ்சின் ராஜ் | கடாவர் |
Un Paarvai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : உன் பார்வை என் பார்வை…
வாய் பேசுதே மௌனமாய்…
உன்னாலே என் வாழ்க்கை…
உண்டானதே வண்ணமாய்…
ஆண் : தனியாய் இருந்த நானே…
எனயே மறந்து போனேன்…
ஆண் : இவளாலே இவளாலே…
என் ஆசையோ மிஞ்சுமே…
விரலோடு விரல் கோர்த்து…
விளையாடுதே நெஞ்சமே…
—BGM—
பெண் : இதழினில் இதழ் பதிக்க…
இருவிழி இமை துடிக்க…
இரவிலும் நான் விழித்து இருந்தேன்…
பெண் : உயிரினில் உலை கொதிக்க…
உடலினில் அலை அடிக்க…
பகலிலும் நான் உறங்க மறந்தேன்…
ஆண் : உனக்காக நானே உயிர் வாழுவேனே…
மன தோளிலே தாங்குவேன்…
உன் கூந்தல் கேட்கும் சிறு பூவுக்காக…
ஒரு தோட்டத்தை வாங்குவேன்…
பெண் : அருகே இருந்தா அது போதும் எனக்கு…
தருவேன் தருவேன் ஒரு ஜீவன் உனக்கு…
ஆண் : இருந்தாலும் இறந்தாலும் பிரியாமல் இருப்பேன்…
—BGM—
பெண் : உன் பார்வை என் பார்வை…
வாய் பேசுதே மௌனமாய்…
ஆண் : மௌனமாய்…
பெண் : உன்னாலே என் வாழ்க்கை…
உண்டானதே வண்ணமாய்…
ஆண் : வண்ணமாய்…
பெண் : தனியாய் இருந்த நானே…
எனயே மறந்து போனேன்…
ஆண் : இவளாலே இவளாலே…
என் ஆசையோ மிஞ்சுமே…
விரலோடு விரல் கோர்த்து…
விளையாடுதே நெஞ்சமே…
Notes : Un Paarvai Song Lyrics in Tamil. This Song from Cadaver (2024). Song Lyrics penned by Kabilan. உன் பார்வை பாடல் வரிகள்.
