உலகங்கள் யாவும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்குன்னக்குடி வைத்தியநாதன்திருவருள்

Ulagangal Yaavum Song Lyrics in Tamil


ஆண் : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…

—BGM—

ஆண் : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…

ஆண் : நிதி வேண்டும் ஏழைக்கு…
மதி வேண்டும் பிள்ளைக்கு…
நியாயங்கள்தான் வேண்டும் எல்லோருக்கும்…

ஆண் : நிதி வேண்டும் ஏழைக்கு…
மதி வேண்டும் பிள்ளைக்கு…
நியாயங்கள்தான் வேண்டும் எல்லோருக்கும்…

ஆண் : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…
உந்தன் அதிகாரமே…

—BGM—

ஆண் : மனம் உள்ளவர் குணம் உள்ளவர்…
மனதுக்குச் சுகம் வேண்டும்…
தனம் உள்ளவர் அதில் பாதியை…
பிறருக்குத் தர வேண்டும்…

ஆண் : மனம் உள்ளவர் குணம் உள்ளவர்…
மனதுக்குச் சுகம் வேண்டும்…
தனம் உள்ளவர் அதில் பாதியை…
பிறருக்குத் தர வேண்டும்…

ஆண் : ஆறெங்கும் நீர் விட்டு…
ஊரெங்கும் சோறிட்டு…
ஆறெங்கும் நீர் விட்டு…
ஊரெங்கும் சோறிட்டு…
பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே…
பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே…
உந்தன் வரம் வேண்டுமே…

ஆண் : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…
உந்தன் அதிகாரமே…

—BGM—

ஆண் : பாடு பட்டவன் பாட்டாளி…
அவன் மாடிக்கு வர வேண்டும்…
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வை…
பாரதம் பெற வேண்டும்…

ஆண் : பாடு பட்டவன் பாட்டாளி…
அவன் மாடிக்கு வர வேண்டும்…
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வை…
பாரதம் பெற வேண்டும்…

ஆண் : நாடெங்கும் சேமங்கள்…
வீடெங்கும் லாபங்கள்…
நாடெங்கும் சேமங்கள்…
வீடெங்கும் லாபங்கள்…
நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே…
நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே…

ஆண் : முருகா அருள் வேண்டுமே…
உன் அருள் வேண்டுமே…
திருவருள் வேண்டுமே…

ஆண் : முருகா அருள் வேண்டுமே…
உன் அருள் வேண்டுமே…
திருவருள் வேண்டுமே…


Notes : Ulagangal Yaavum Song Lyrics in Tamil. This Song from Thiruvarul (1975). Song Lyrics penned by Kannadasan. உலகங்கள் யாவும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading