உலகம் பிறந்தது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபாசம்

Ulagam Pirandhadhu Enakaga Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…
மலர்கள் மலர்வது எனக்காக…
அன்னை மடியை விரித்தாள் எனக்காக…

ஆண் : உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…

ஆண் : உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…
மலர்கள் மலர்வது எனக்காக…
அன்னை மடியை விரித்தாள் எனக்காக…

ஆண் : உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…

—BGM—

ஆண் : காற்றில் மிதக்கும் ஒலிகளிலே…
கடலில் தவழும் அலைகளிலே…
இறைவன் இருப்பதை நான் அறிவேன்…
என்னை அவனே தான் அறிவான்…
இறைவன் இருப்பதை நான் அறிவேன்…
என்னை அவனே தான் அறிவான்…

ஆண் : உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…

—BGM—

ஆண் : தவழும் நிலவாம் தங்கரதம்…
தாரகை பதித்த மணிமகுடம்…
குயில்கள் பாடும் கலைக்கூடம்…
கொண்டது எனது அரசாங்கம்…
குயில்கள் பாடும் கலைக்கூடம்…
கொண்டது எனது அரசாங்கம்…

ஆண் : உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…

—BGM—

ஆண் : எல்லாம் எனக்குள் இருந்தாலும்…
என்னை தனக்குள் வைத்திருக்கும்…
அன்னை மனமே என் கோயில்…
அவளே என்றும் என் தெய்வம்…
அன்னை மனமே என் கோயில்…
அவளே என்றும் என் தெய்வம்…

ஆண் : உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…

ஆண் : உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…
மலர்கள் மலர்வது எனக்காக…
அன்னை மடியை விரித்தாள் எனக்காக…

ஆண் : உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…


Notes : Ulagam Pirandhadhu Enakaga Song Lyrics in Tamil. This Song from Paasam (1962). Song Lyrics penned by Kannadasan. உலகம் பிறந்தது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading