தாழம்பூ சேலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாசூரிய நமஸ்காரம்

Thazhampoo Sela Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாழம்பூ சேலை…

ஆண் : தாழம்பூ சேலை மானே என் மேல…
தாகத்தை சொல்லுதடி…
தொட்டுக்கொள்ள வேகத்தை சொல்லுதடி…

பெண் : தாழம்பூ சேலை மாமா உன் மேல…
தாகத்தை சொல்லுதய்யா…
தொட்டுக்கொள்ளும் வேகத்தை சொல்லுதய்யா…

ஆண் : இளவட்டம் ரெண்டும் சரி வட்டம்…
மனமெங்கும் இன்பம் கொடி கட்டும் கொடி கட்டும்…
சுகம் சொல்லி உன்னை சுத்தும்…

பெண் : தாழம்பூ சேலை மாமா உன் மேல…
தாகத்தை சொல்லுதய்யா…
தொட்டுக்கொள்ளும் வேகத்தை சொல்லுதய்யா…

—BGM—

ஆண் : தாமரை பூவுக்கு தாலியும் கட்டி…
தாங்கி புடுச்சேன் நானே…
வாலிப கூத்துக்கு நேரமும் வந்தது…
வெக்கம் இனி என்ன மானே…

பெண் : பொங்கி வந்தா இந்த தங்க கொடம்…
உங்களுக்குத்தான் மாமா…
அந்தரங்க சுக சொந்தம் மட்டும்…
அப்பறம் அப்பறம் மாமோய்…

ஆண் : அடி இது என்ன பேச்சு…
அனலாச்சு மூச்சு…
இனி உள்ளம் தாங்காதடி…

பெண் : தாழம்பூ சேலை மாமா உன் மேல…
தாகத்தை சொல்லுதய்யா…
தொட்டுக்கொள்ளும் வேகத்தை சொல்லுதய்யா…

—BGM—

பெண் : தூங்கி கெடக்கும் ஆச மனச…
தட்டி எழுப்பாதே மாமா…
தாங்கி பிடிச்சது போதும் போதும்…
தள்ளி நில்லுங்க ஆமா…

ஆண் : அங்கங்கள் அங்கங்கு பொங்கிடும் அழகு…
ஆசைய தூண்டுது மானே…
தங்க குடத்துக்குள் தேனை எடுக்க…
தவிச்சு நிக்கிறேன் நானே…

பெண் : அட இது என்ன கூத்து…
உனக்கென்ன ஆச்சு…
அதுக்கொரு நேரம் உண்டு…

ஆண் : தாழம்பூ சேலை மானே என் மேல…
தாகத்தை சொல்லுதடி…
தொட்டுக்கொள்ள வேகத்தை சொல்லுதடி…

பெண் : தாழம்பூ சேலை மாமா உன் மேல…
தாகத்தை சொல்லுதய்யா…
தொட்டுக்கொள்ளும் வேகத்தை சொல்லுதய்யா…

ஆண் : இளவட்டம் ரெண்டும் சரி வட்டம்…
பெண் : மனமெங்கும் இன்பம் கொடி கட்டும் கொடி கட்டும்…
சுகம் சொல்லி உன்னை சுத்தும்…

ஆண் : தாழம்பூ சேலை மானே என் மேல…
தாகத்தை சொல்லுதடி…
தொட்டுக்கொள்ள வேகத்தை சொல்லுதடி…


Notes : Thazhampoo Sela Song Lyrics in Tamil. This Song from Suriya Namaskaram (1992). Song Lyrics penned by Kalidasan. தாழம்பூ சேலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading