துள்ளி எழுந்தது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஇளையராஜா & கே.எஸ். சித்ராஇளையராஜாகீதாஞ்சலி

Thulli Ezhunthathu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…
சந்த வரிகள போட்டு…
சொல்லிக் கொடுத்தது காற்று…

பெண் : உறவோடுதான் அதப் பாடணும்…
இரவோடுதான் அரங்கேறணும்…

பெண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…

ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…
சந்த வரிகள போட்டு…
சொல்லிக் கொடுத்தது காற்று…

ஆண் : உறவோடுதான் அதப் பாடணும்…
இரவோடுதான் அரங்கேறணும்…

ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…

—BGM—

ஆண் : உயிரே ஒரு வானம்பாடி…
உனக்காக கூவுது…
அழகே புது ஆசை வெள்ளம்…
அணை தாண்டி தாவுது…

ஆண் : மலரே தினம் மாலை நேரம்…
மனம்தானே நோகுது…

ஆண் : மாலை முதல்…
மாலை முதல் காலை வரை…
சொன்னால் என்ன காதல் கதை…
காமன் கணை எனை வதைக்குதே…

ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…

—BGM—

ஆண் : அடியே ஒரு தூக்கம் போட்டு…
நெடுநாள்தான் ஆனது…
கிளியே பசும்பாலும் தேனும்…
வெறுப்பாகி போனது…

ஆண் : நிலவே பகல் நேரம் போலே…
நெருப்பாக காயுது…

ஆண் : நான் தேடிடும்…ஹ்ம்ம்…
நான் தேடிடும் ராசாத்தியே…
நீ போவதா ஏமாத்தியே…
வா வா கண்ணே இதோ அழைக்குது…

ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…
சந்த வரிகள போட்டு…
சொல்லிக் கொடுத்தது காற்று…

ஆண் : உறவோடுதான் அதப் பாடணும்…
இரவோடுதான் அரங்கேறணும்…

ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…


Notes : Thulli Ezhunthathu Song Lyrics in Tamil. This Song from Geethanjali (1985). Song Lyrics penned by Vairamuthu. துள்ளி எழுந்தது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading