தூக்கணாங்குருவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாஜல்லிக்கட்டுக் காளை

Thookanakuruvi Song Lyrics in Tamil


பெண் : சின்னப் பொண்ணு சின்ன மாப்பிள்ள…
சிரிச்சு கட்டின வீடு…
அதை சிக்கில்லாம எடுத்து தந்தா…
சென்ன பட்டணம் பாதி…

BGM

குழு : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…

ஆண் : பூ மணக்குற காத்து…
அதில் தேனிரவுகள் பூத்து…
பூ மணக்குற காத்து…
அதில் தேனிரவுகள் பூத்து…
தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மா… ஆ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : அம்மம்மா நில்லம்மா…
வெட்கம் இனி ஏனம்மா…

பெண் : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…

BGM

ஆண் : பூத்த மல்லிகை வேர்த்திருந்தது…
நான் தொடும் போது…

பெண் : அது வேர்த்த முகத்தை போர்த்திக் கொண்டது…
தேன் தரும் போது…

ஆண் : ஏந்தும் கைகளில் சாந்தம் கொள்வது…
உன் மனம்தானே…

பெண் : மனம் சாந்தம் கொண்டதும்…
சரசம் செய்வதும் உன் விரல்தானே…

ஆண் : கோடியிலே நீ ஒருத்தி…
கொத்து விட்ட செம்பருத்தி…

பெண் : காளை ஒன்னு சாஞ்சதைய்யா…
கன்னிப் பொண்ணு சேலை முட்டி…

ஆண் : மனம் பாடிப் பாடி…
தினம் தேடித் தேடி…
என்னைக் கூடி கொஞ்ச வந்த மானே…

குழு : பொன்னம்மா கண்ணம்மா…
பூவெடுத்து போடம்மா

ஆண் : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…

BGM

பெண் : ஊரு மெச்சிட சீரு வைத்திட நீ வர வேண்டும்…
ஆண் : அடி சீரு வைத்திடும் தேதி ஒன்றினை நீ தர வேண்டும்…

பெண் : கூரப் பட்டுடன் ஓரக்கண்ணில் பார்த்திருப்பேனே…
ஆண் : உன் கூந்தல் தொடங்கி பாதம் வரையில் நான் ரசிப்பேனே…

பெண் : பால் எடுத்து நான் கொடுத்து…
பஞ்சணை மேல் கொஞ்சிடுவேன்…

ஆண் : தேவியிடம் மண்டியிட்டு…
தேவைகளை கெஞ்சிடுவேன்…

பெண் : அட போதும் போதும் இன்று…
நாளை பார்ப்போம் என்று…
நானும் தள்ளிப் படுத்தேனே…

குழு : அம்மம்மா மாப்பிள்ளை…
ஏங்குவது நியாயமா

ஆண் : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…

பெண் : பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து…
பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து…
தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மா… ஆ…

குழு : அம்மம்மா நில்லம்மா…
வெட்கம் இனி ஏனம்மா…

குழு : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…


Notes : Thookanakuruvi Song Lyrics in Tamil. This Song from Jallikattu Kaalai (1994). Song Lyrics penned by Kalidasan. தூக்கணாங்குருவி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading