திருச்செந்தூரின் கடலோரத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & சீர்காழி கோவிந்தராஜன்குன்னக்குடி வைத்தியநாதன்தெய்வம்

Thiruchendoorin Kadalorathil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…
திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…

ஆண் : தேடி தேடி வருவோர்க்கெல்லாம்…
தினமும் கூடும் தெய்வாம்சம்…
தேடி தேடி வருவோர்க்கெல்லாம்…
தினமும் கூடும் தெய்வாம்சம்…

ஆண் : திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…

—BGM—

ஆண் : அசுரரை வென்ற இடம்…
அது தேவரைக் காத்த இடம்…
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசி திங்களிலும்…
அன்பர் திருநாள் காணுமிடம்…
அன்பர் திருநாள் காணுமிடம்…

ஆண் : அசுரரை வென்ற இடம்…
அது தேவரைக் காத்த இடம்…
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசி திங்களிலும்…
அன்பர் திருநாள் காணுமிடம்…
அன்பர் திருநாள் காணுமிடம்…

ஆண் : திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…
தேடி தேடி வருவோர்க்கெல்லாம்…
தினமும் கூடும் தெய்வாம்சம்…

—BGM—

ஆண் : கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்…
தலையா கடல் அலையா…

—BGM—

ஆண் : குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்…
குமரனவன் கலையா…

ஆண் : கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்…
தலையா கடல் அலையா…
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்…
குமரனவன் கலையா…

ஆண் : திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…
தேடி தேடி வருவோர்க்கெல்லாம்…
தினமும் கூடும் தெய்வாம்சம்…

—BGM—

ஆண் : மங்கையரின் குங்குமத்தை காக்கும் முகம் ஒன்று…
வாடுகின்ற ஏழைகளை காணும் முகம் ஒன்று…
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும் முகம் ஒன்று…
ஜாதி மத பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று…
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று…
நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு…

ஆண் : மங்கையரின் குங்குமத்தை காக்கும் முகம் ஒன்று…
வாடுகின்ற ஏழைகளை காணும் முகம் ஒன்று…
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும் முகம் ஒன்று…
ஜாதி மத பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று…
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று…
நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு…
ஆறுமுகம் இங்கு…

ஆண் : திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…
தேடி தேடி வருவோர்க்கெல்லாம்…
தினமும் கூடும் தெய்வாம்சம்…

—BGM—

ஆண் : பொன்னழகு மின்னி வரும் வண்ண மயில் கந்தா…
கண்மலரில் தன்னருளை காட்டி வரும் கந்தா…

ஆண் : பொன்னழகு மின்னி வரும் வண்ண மயில் கந்தா…
கண்மலரில் தன்னருளை காட்டிவரும் கந்தா…

ஆண் : நம்பியவர் வந்தால்…
நெஞ்சுருகி நின்றால்…
கந்தா… முருகா…

ஆண் : நம்பியவர் வந்தால்…
நெஞ்சுருகி நின்றால்…
கந்தா முருகா வருவாய்…
அருள் தருவாய்…
முருகா…


Notes : Thiruchendoorin Kadalorathil Song Lyrics in Tamil. This Song from Deivam (1972). Song Lyrics penned by Kannadasan. திருச்செந்தூரின் கடலோரத்தில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading