தி சோல் ஆஃப் சத்யா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஸ்ருதி ரஞ்சனிஸ்ருதி ரஞ்சனிசத்யா (2023)

The Soul Of Satya Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏதோ புது காதல் சாயமே…
முதல் முதலாய் விழுந்ததே…
என்னுள் புரியாத மாயமே…
உன்னாலே ஆகுதே…

பெண் : றெக்கை வந்த மனம் வானில் வட்டம் போட…
ரேகைகளும் உன்னை தாளம் தட்டி பாட…
முட்டி முட்டி என்னை காதலும் சூளுதே…

பெண் : அக்கம் பக்கத்திலே ஆசை தள்ளிவிடும்…
வெட்கம் வர இதழ் முத்தம் ஒன்று தர…
வாழும் காலமெல்லாம் உன் துணை கேட்டதே…

பெண் : போகும் தூரம் யாவுமே…
என் காதலாய் உன் வானமே…
சேர நானும் நீயுமே விராய்…

பெண் : இங்கு பூக்கள் வீசும் வாசமே…
உந்தன் பேரை பேசுமே…
பாசமாய் உன் நேசம் ஏற்கவா…

பெண் : ஏதோ புது காதல் சாயமே…
முதல் முதலாய் விழுந்ததே…
என்னுள் புரியாத மாயமே…
உன்னாலே ஆகுதே…

BGM

பெண் : உனது சிரிப்பில் முழுதாய்…
நினத்த மழையில் நடந்தே…
உயிரில் விழுந்த துளியாய் நீ சேரவா…

பெண் : அறையில் நுழைய மெதுவாய்…
கனவும் காண விழித்தேன்…
கனவில் உள்ள நிஜமாய் கை சேரவா…

பெண் : போகினேன் நெருங்கினாய்…
உனது பேச்சில் நான்தான்…
உறங்கவே மறக்கிறேன் இரவில் நானுமே…

பெண் : மயங்கினேன் மதுவென…
மடியில் சாயும் நொடிதானே…
மறுபடி உறவென நீயும் வேண்டுமே…

BGM


Notes : The Soul Of Satya Song Lyrics in Tamil. This Song from Satya (2023). Song Lyrics penned by Vivek. தி சோல் ஆஃப் சத்யா பாடல் வரிகள்.


Scroll to Top